அவங்க ஒரு பைத்தியம்.. வாழ்க்கையில தோல்வி.. அதுதான் இப்படி ஆகிட்டாங்க.. யாரை சொல்கிறார் வைரமுத்து?

சென்னை: தமிழ் சினிமா பாடல்களில் தவிர்க்கவே முடியாதவர் வைரமுத்து. இதுவரை 7000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கும் அவர் நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். கிட்டத்தட்ட 7 தேசிய விருதுகளையும் வென்றிருக்கிறார். இளைய பாடலாசிரியர்களுக்கு போட்டியாக இப்போதும் திகழ்ந்துகொண்டிருக்கிறார் வைரமுத்து. இந்தச் சூழலில் அவரை சுற்றி சமீபகாலமாக சர்ச்சைகள் எழுந்தன. தற்போது அவர் போட்டிருக்கும் ட்வீட் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

வைரமுத்து தமிழ் சினிமா பாடல்களில் தவிர்க்க முடியாத ஆளுமை. 7000க்கும் அதிகமான பாடல்களை எழுதியிருக்கும் அவர் நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் என எழுத்துக்காகவே தன்னை ஒப்புக்கொடுத்தவர். அரசு பணி செய்துகொண்டிருந்த அவருக்கு சினிமா ஆர்வம் ஏற்பட்டதை அடுத்து; பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவான நிழல்கள் படத்தில் தனது முதல் பாடலை எழுதினார். முதல் பாடலிலேயே வானம் எனக்கொரு போதி மரம் என்று எழுதி மெர்சல் செய்தார்.

vairamuthu suchitra


மேஜிக் கூட்டணி: முதல் பாடலிலேயே ரசிகர்களை மட்டுமின்றி இளையராஜாவையும் கவர்ந்துவிட்டார். இதன் காரணமாக ராஜாவின் கோட்டைக்குள் ஆஸ்தான கவிஞராக மாறினார் வைரமுத்து. இரண்டு பேரும் இணைந்து, புன்னகை மன்னன், சிந்து பைரவி, மண் வாசனை, முதல் மரியாதை, கடலோர கவிதைகள் என ஏராளமான படங்களில் பணிபுரிந்தார்கள். அவர்கள் இருவரும் இணைந்த பாடல்கள் இன்றுவரை கல்ட் க்ளாசிக்காக ஒலித்துக்கொண்டிருக்கின்றன. அந்தக் கூட்டணி பல மேஜிக்குகளை நிகழ்த்தியது என்பது உண்மை.

பிரிந்த கூட்டணி: ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை அந்த கூட்டணி சில காரணங்களால் உடைந்தது. அதுகுறித்த விளக்கத்தை இரண்டு பேருமே இதுவரை சொல்லவில்லை. அவர்களை சேர்த்துவைக்க பலர் முயன்று பார்த்தும் அது தோல்வியிலேயே முடிந்தது. தொடர்ந்து இருவரும் தங்களது பணியில் பிஸியாக இருந்து பெரும் ஆளுமைகளாக உருவெடுத்திருக்கிறார்கள். அதேபோல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் தொடர்ந்து பணியாற்றிவந்த வைரமுத்து; இப்போது அவருடனும் பணியாற்றுவதில்லை. அதற்கு யூகங்களாக பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

சர்ச்சைகள்: வைரமுத்து கிட்டத்தட்ட 7 முறை தேசிய விருது வென்றிருக்கிறார். தொடர்ந்து பல படங்களுக்கு பாடல்களும் எழுதிவருகிறார். இந்தச் சூழலில் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், 'வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உச்சமாய் மூளைப் பிறழ்வுக்கு ஆளாகும் சிலர் ஒருதலையாய் நேசிக்கப்பட்டவர்கள்மீது வக்கிர வார்த்தைகளை உக்கிரமாய் வீசுவர்; தொடர்பற்ற மொழிகள் பேசுவர்

vairamuthu suchitra


பைத்தியம்போல் சிலநேரமும் பைத்தியம் தெளிந்தவர்போல் சிலநேரமும் காட்சியளிப்பர் தம்மைக் கடவுள் என்று கருதிக்கொள்வர் இந்த நோய்க்கு 'Messianic Delusional Disorder’ என்று பெயர் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அல்லர்; இரக்கத்திற்குரியவர்கள்; அனுதாபத்தால் குணப்படுத்தக் கூடியவர்கள் உளவியல் சிகிச்சையும் மருந்து மாத்திரைகளும் உண்டு உரிய மருத்துவர்களை அணுக வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

யாரை சொல்கிறார்?: அவரது இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. முக்கியமாக இந்த ட்வீட்டை பார்த்த ரசிகர்கள், கடந்த சில காலமாகவே வைரமுத்துவை சுற்றி சர்ச்சைகள் எழுந்தவண்ணம் இருக்கின்றன. முக்கியமாக சில நாட்களுக்கு பாடகி சுசித்ரா அளித்த ஒரு பேட்டியில் வைரமுத்து மீது சில குற்றச்சாட்டுக்களை வைத்திருந்தார். இப்போது வைரமுத்து இப்படி ஒரு ட்வீட் போட்டிருக்கிறார். எனில் வைரமுத்து இந்த ட்வீட்டின் மூலம் சுசித்ராவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறாரா என்று கேள்விகளை எழுப்பிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X