உயர உயர மண்பார்த்து நட... மகன் மதன் கார்க்கிக்கு வைரமுத்துவின் மெசேஜ்!

சென்னை : ஆர்ஆர்ஆர் படம் இன்னும் இரு தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் படம் ரிலீசாக உள்ள நிலையில் படத்தில் பாடலும் வசனமும் எழுதியுள்ளார் மதன் கார்க்கி. இதையொட்டி வைரமுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பதிவு வைரலாகி வருகிறது.

ஆர்ஆர்ஆர் படம்

ஆர்ஆர்ஆர் படம்

ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஷ்ரேயா சரண் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வரும் 25ம் தேதி வெளியாகவுள்ள படம் ஆர்ஆர்ஆர். இந்தப் படம் கொரோனா காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளது.

5 மொழிகளில் ரிலீஸ்

5 மொழிகளில் ரிலீஸ்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் இந்தப் படம் ரிலீசாக உள்ளது. இதற்காக தீவிரமான பிரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். படத்தில் பாடல் மற்றும் வசனங்களை எழுதியுள்ளார் பாடலாசிரியர் மதன் கார்க்கி.

வைரமுத்து அறிவுரை

வைரமுத்து அறிவுரை

இதையொட்டி அவரது அப்பாவும் பிரபல பாடலாசிரியருமான வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் மதன் கார்க்கிக்கு வாழ்த்துக்களையும் அறிவுரையையும் கவிதை வடிவில் வழங்கியுள்ளார். மதன்கார்க்கிக்கு கூறுவது போல ஒட்டுமொத்த சமுதாயத்திற்கு அவர் இந்த செய்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

பாடல், வசனம் எழுதிய மதன் கார்க்கி

பாடல், வசனம் எழுதிய மதன் கார்க்கி

ஆர்ஆர்ஆர் படத்தில் வசனமும் பாடலும் மதன் கார்க்கி எழுதியுள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர், பெரும்படைப்பில் மதன் கார்க்கி பங்குபெறுவது குறித்து பெருமிதம் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒரு படைப்பில் உழைப்பை நிறைவாக கொடுத்து வெற்றியில் குறைவாக எடுக்க வேண்டும் என்ற அனுபவத்தை மறக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

 மதன் கார்க்கிக்கு அறிவுரை

மதன் கார்க்கிக்கு அறிவுரை

ராஜமௌலிக்கு தனது வாழ்த்தை கூறும்படியும் தெரிவித்துள்ளார். மேலும் உயர உயர சென்றாலும் மண் பார்த்து நடக்க வேண்டும் என்பதையும் அறிவுறுத்தியுள்ளார். அவரது இந்தப் பதிவை பார்த்த ரசிகர்கள் அவர், மகனுக்கு அளித்துள்ள இந்த அறிவுரை சமுதாயத்திற்கு பொருந்துவது குறித்து பாராட்டு தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X