மீண்டும் உடல்நலக்குறைபாடு.. கவிஞர் வைரமுத்து அப்பல்லோவில் அனுமதி!
கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: திடீர் உடல்நலக் குறைபாடு காரணமாக கவிஞர் வைரமுத்து சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து. தேசிய விருதுகள் பல பெற்ற அவர் மீது சமீபத்தில் பாடகி சின்மயி பாலியல் புகார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் புகார் தொடர்பாக வைரமுத்து மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்தப் பிரச்சினைகளுக்கு இடையே, கடந்த மாதம் வைரமுத்துவுக்கு உணவு ஒவ்வாமை காரணமாக திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மதுரை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற அவர், பின்னர் நலமாக வீடு திரும்பினார்.
இந்நிலையில், நேற்று மீண்டும் அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
என்னவிதமான உடல் உபாதை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறித்த விபரங்கள் சரிவரத் தெரியவில்லை. இது தொடர்பாக அவரது உதவியாளர்களைத் தொடர்பு கொண்டபோது, அவர்கள் தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











