twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “மனம் பொறுக்கவில்லை; மலேசியா வந்துவிட்டேன்”: துன் சாமிவேலுவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய வைரமுத்து

    |

    மலேசியா: மலேசியா முன்னாள் அமைச்சர் துன் சாமிவேலு காலமானார், அவருக்கு வயது 86.

    தமிழகத்துக்கும் மலேசியத் தமிழர்களுக்கும் இடையே உறவுப்பாலமாக இருந்தவர் சாமிவேலு.

    துன் சாமிவேலு மறைவுக்கு பாடலாசிரியர் வைரமுத்து மலேசியா சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

    யஷ்க்கு பாராட்டு சொன்ன சூரி.. அவர் எதுக்காக காத்திருக்காரு தெரியுமா? யஷ்க்கு பாராட்டு சொன்ன சூரி.. அவர் எதுக்காக காத்திருக்காரு தெரியுமா?

    கலைஞருக்கு நெருக்கமானவர் துன் சாமிவேலு

    கலைஞருக்கு நெருக்கமானவர் துன் சாமிவேலு

    மலேசியாவில் நீண்ட காலம் மத்திய அமைச்சராகப் பதவி வகித்தவர் சாமிவேலு. சுமார் 29 ஆண்டுகள் நாட்டின் தொழில்நுட்பத் துறை, பொதுப் பணித்துறை உள்ளிட்ட பல துறைகளில் அமைச்சராக பொறுப்பேற்று சிறப்பாகச் செயல்பட்டவர் சாமிவேலு. மேலும், தமிழகத்துக்கும் மலேசியத் தமிழர்களுக்கும் இடையே உறவுப்பாலமாக இருந்த சாமிவேலு. மறைந்த தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கும் நெருக்கமானவராக இருந்தார், அதேபோல், தமிழகத்தின் அனைத்து அரசியல் தலைவர்களுடனும் சாமிவேலுவுக்கு நெருங்கிய நட்பு இருந்தது.

    பாடலாசிரியர் வைரமுத்துவுடன் நெருங்கிய நட்பு

    பாடலாசிரியர் வைரமுத்துவுடன் நெருங்கிய நட்பு

    அரசியல் தலைவர்கள் போலவே, திரையுலகைச் சேர்ந்த பலருடனும் சாமி வேலுவுக்கு நெருங்கிய நட்பு இருந்தது. அதேபோல், பாடலாசிரியர் வைரமுத்துவுக்கும் சாமி வேலுவுக்கும் இடையே நல்ல நட்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. வைரமுத்துவின் பாடல்களும், கவிதைகளும் அவருக்கு ஏராளமான ரசிகர்களைப் பெற்றுக்கொடுத்தது. அதில் ஒருவராக அறிமுகமான சாமிவேலு, பின்னர் வைரமுத்துவின் நெருங்கிய நண்பரானார். இந்நிலையில், துன் சாமிவேலுவின் மறைவுக்கு பாடலாசிரியர் வைரமுத்து மலேசியா சென்று அஞ்சலி செலுத்தினார்.

    மனம் பொறுக்கவில்லை; மலேசியா வந்துவிட்டேன்

    மனம் பொறுக்கவில்லை; மலேசியா வந்துவிட்டேன்

    மேலும், இதுகுறித்து தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள வைரமுத்து, "மனம் பொறுக்கவில்லை; மலேசியா வந்துவிட்டேன். மலேசியப் பெருந்தலைவர் துன் சாமிவேலுவுக்கு என் கண்ணீர்த் துண்டுகளைக் காணிக்கை செலுத்திவிட்டேன் உடன் மகன் வேள்பாரி, ம.இ.கா தலைவர் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன், அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன். தீயோடு சேருது உடல் திசையோடு சேருது புகழ்" என கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளார். வைரமுத்துவின் இந்த அஞ்சலி பதிவு, சமூல வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    ‘துன்' விருதை வென்ற சாமி வேலு

    ‘துன்' விருதை வென்ற சாமி வேலு

    இதனிடையே, சில ஆண்டுகளுக்கு முன்பு தெற்காசியாவுக்கான மலேசிய பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருந்த சாமிவேலு, 2010ம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். மலேசியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருதான 'துன்' விருதை சாமிவேலுவைத் தவிர மேலும் ஒரு மலேசிய தமிழர் மட்டுமே பெற்றிருந்தார். அவர், அந்நாட்டு அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சம்பந்தன் ஆவார். துன் என்ற மலேசிய நாட்டின் உயரிய பட்டத்தை சாமிவேலு பெற்றிருந்தார். ஆனாலும், அதற்கு முன் சாமிவேலு பெற்ற டத்தோ பட்டமே அவரது அடையாளமாக மாறியது. தமிழ்நாட்டில் பரவலாக அவர் டத்தோ சாமிவேலு என்றே அறியப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Former Malaysian Minister and former National President of the Malaysian Indian Congress Party Thun' Samy Vellu passed away. He was 86 years old. Samy Vellu was the most important icon between Tamil Nadu and Malaysian Tamil's relationship. Lyricist Vairamuthu went to Malaysia to pay a tearful tribute to Tun Samy Vellu
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X