பிறப்பு சிவப்பு; இருப்பு கறுப்பு.. கலையாக் கலையே.. கமல்ஹாசனை பாராட்டும் கவிஞர் வைரமுத்து!

By

சென்னை: நடிகர் கமல்ஹாசனை, 'புரிதல் கடிது; புரிந்தால் இனிது' என்று கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார்.

Recommended Video

MADHAN KARKY INTERVIEW PROMO | V-CONNECT | FILMIBEAT TAMIL

நடிகர் கமல்ஹாசன் சினிமாவுக்கு வந்து 61 ஆண்டு ஆனதை அவர் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடினர்.

பீம்சிங் இயக்கிய 'களத்தூர் கண்ணம்மா' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமல்ஹாசன்.

அரசியல் தலைவர்

அரசியல் தலைவர்

இந்தப் படம், 1959-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியானது. ஜெமினி கணேசன், சாவித்ரி நடித்த இந்த படம் மூலம்தான் கமல்ஹாசன், திரையுலகில் அறிமுகமானார். நடன கலைஞர், கதாநாயகன், கதை, வசனகர்த்தா, பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் என்று பல திறமைகளை வெளிப்படுத்திய கமல்ஹாசன், இப்போது அரசியல் கட்சி தலைவராக இருக்கிறார்.

போட்டா படியுது

போட்டா படியுது

அவரது 61 ஆண்டுகள் சினிமா பயணத்தை ரசிகர்கள், சமூக வலைத்தள கொண்டாடி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக சிம்பா படத்தின் இயக்குநர் அரவிந்த் ஸ்ரீதர் கமல்ஹாசன் நடித்த சத்யா படத்தின் ஒரு பாடலை மறு ஆக்கம் செய்து வெளியிட்டார். அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள போட்டா படியுது படியுது பாடலை, ரீமேக் செய்திருந்தார்.

வீடியோ பாடல்

வீடியோ பாடல்

இந்த வீடியோவை கைதி, மாஸ்டர் படங்களில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கடந்த சில நாட்களுக்கு முன் ட்விட்ட்ரில் வெளியிட்டார். இதை வெளியிடுவதில் பெருமை அடையவதாகவும் கூறி இருந்தார். இந்த வீடியோ பாடல் வரவேற்பை பெற்றிருந்தது. இதற்கு நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் நன்றி தெரிவித்திருந்தார். பல திரையுலக பிரபலங்கள் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அவரை பாராட்டி பதிவுகளை வெளியிட்டு இருந்தனர்.

கவிஞர் வைரமுத்து

கவிஞர் வைரமுத்து

இயக்குனர் பாரதிராஜா, 'இந்திய திரையுலகில் அரை நூற்றாண்டுக்கு மேல் கடந்து பல்வேறு தொழில் நுட்பங்கள், பல நூறு கதாபாத்திரங்கள். உடலை வருத்தி உச்சம் தொட்ட உலக நாயகன் என் கமலுக்கு வாழ்த்துக்கள்' என்று கூறியிருந்தார். இந்நிலையில், கவிஞர் வைரமுத்து, நடிகர் கமல்ஹாசனைப் பாராட்டி இன்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

'பரமக்குடியின்
அருமைக் கலைஞன்
பிறப்பு சிவப்பு;
இருப்பு கறுப்பு.
மரபுகடந்த புதுக்கவிதை
புரிதல் கடிது;
புரிந்தால் இனிது.
ஆண்டுகள் அறுபது
காய்த்த பின்னும்
நனிகனி குலுங்கும் தனிவிருட்சம்.
கலைத்தாய் தன் நெற்றியில்
மாற்றி மாற்றிச் சூடுவது
திலகத்தையும் இவர் பெயரையும்
‘கலையாக் கலையே கமல்'
-இவ்வாறு அவர் கமல்ஹாசனை பாராட்டியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X