“சாப்பாடு விற்றுப் பிழைக்கும் ஒரு கருஞ்சிறுமியின் உடல் திருட்டு” – வைரமுத்துவை வியக்க வைத்த படம்!
சென்னை: கவிஞர் வைரமுத்து தொடர்ந்து ஏகப்பட்ட படங்கள் குறித்த தகவல்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
Recommended Video
தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் குறித்தும், புதிதாக பாடல்கள் எழுதியுள்ள படங்கள் குறித்தும் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், தான் வியந்து பார்த்த ஆப்பிரிக்க படமான 'பிளாக் ரோஸ்' பற்றி அவர் எழுதியுள்ள கவிதை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சமூக வலைதளத்தில் ஆர்வம்
கவிஞரும் பிரபல பாடலாசிரியருமான வைரமுத்து தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆர்வம் செலுத்தி வருகிறார். ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருக்க பயன்படும் சமூக வலைதளங்களை ஏகப்பட்ட பிரபலங்கள் பயன்படுத்தி வரும் நிலையில், வைரமுத்துவும் தொடர்ந்து தனது கருத்துக்களையும், தான் கலந்து கொள்ளும் நிகழ்வுகள் குறித்தும் அதில் பதிவிட்டு வருகிறார்.

மக்களின் தேவை கேட்டும் வரட்டும்
சமீபத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனது வாக்கினை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் செலுத்திய வைரமுத்து அதுதொடர்பாக வெளியிட்ட பதிவு ஏகப்பட்ட மக்களின் கவனத்தை ஈர்த்தது.
"கோடம்பாக்கம்
டிரஸ்ட்புரம்
வாக்குச் சாவடியில்
வாக்களித்தேன்
வெற்றி பெறுவோர்
ஓட்டுக் கேட்டு வந்ததுபோல்
மக்களின் தேவை கேட்டும்
வரவேண்டும் என்பது
எங்கள் விருப்பம்;
வந்தால் அது திருப்பம்" எனக் கூறியிருந்தார்.

முதலமைச்சருக்கு வாழ்த்து
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்துப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்து மகிழ்ந்தேன் உடன் சகோதரியார் திருமதி துர்கா ஸ்டாலின் இருந்தார் என அந்த புகைப்படத்தையும் பதிவு செய்திருந்தார் வைரமுத்து. இந்நிலையில், தற்போது ஆப்பிரிக்க படம் ஒன்றை பாராட்டி அவர் எழுதியுள்ள கவிதை பலரது பாராட்டுக்களை அள்ளி வருகிறது.

ஆப்பிரிக்க படத்தை பாராட்டிய வைரமுத்து
சினிமா விழாக்கள், புதிய படங்களுக்கு பாடல் எழுதுவது என மீண்டும் ஓய்வெடுக்காமல் சுழன்று வரும் வைரமுத்து, ஆப்பிரிக்க படமான பிளாக் ரோஸ் படத்தை பார்த்து பாராட்டிய கவிதை இதோ,
"ஓர் அரிதான
ஆப்பிரிக்கப் படம் பார்த்தேன்
'Black Rose'
உரித்த வாழ்க்கையில்
தெறித்த குருதி
சாப்பாடு விற்றுப் பிழைக்கும்
ஒரு கருஞ்சிறுமியின்
உடல் திருட்டு
கல்லீரல் வரையில்
வலிக்கும் கதை
இப்போதெல்லாம்
இலக்கியங்கள்
பிம்பங்களாலும்
எழுதப்படுகின்றன
நிலங்கள் வெவ்வேறு;
நிஜங்கள் ஒன்று!"
என அந்த படத்தின் கதை பற்றியும் அதில் சொல்லியிருக்கும் விஷயங்களையும் கூறி பாராட்டி உள்ளார் வைரமுத்து.


Click it and Unblock the Notifications











