இளையராஜா குறித்து கேள்வி.. அதுபற்றி நான் பேச மாட்டேன்.. வேற கேளுங்க..கடுப்பான வைரமுத்து!

சென்னை: கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாவில் எந்த பக்கம் திரும்பினாலும், இளையராஜா, வைரமுத்து விவகாரம் தான் பேசு பொருளாக உள்ளது. பலர் இளையராஜாவிற்கு ஆதரவாகவும், சிலர் வைரமுத்துக்கு ஆதரவாகவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை வந்த வைரமுத்துவிடம் செய்தியாளர் இளையராஜா குறித்து கேள்வி கேட்க, வேற கேள்வி கேளுங்கள் என்று கூறினார்.

கடந்த சில நாட்களுக்கு முன் படிக்காத பக்கங்கள் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய வைரமுத்து, ஒரு பாடலில், இசை பெரியதா, மொழி பெரியதா என்பது ஒரு பெரிய சிக்கலாகப் பேசப்பட்டு வருகிறது. இதில் என்ன சந்தேகம்? இசை எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியது மொழி. மொழி எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியது இசை. இரண்டும் கூடினால்தான் அது பாட்டு. சில நேரங்களில், இசை சிறந்ததாகவும், சில நேரங்களில், மொழி சிறந்ததாகவும் திகழ்கிற சந்தர்ப்பங்கள் உண்டு. இதைப்புரிந்து கொண்டவன் ஞானி. இதைப்புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி என்று பேசி இருந்தார்.

vairamuthu refused to talk about ilayaraja issue

சாடிய கங்கை அமரன்: வைரமுத்து ஞானி என குறிப்பிட்டு இருந்ததால், பலர் அவர் இளையராஜாவைத்தான் குறிப்பிட்டு இருந்தார் என்று கூறி இணையத்தில் இந்த விவகாரம் மிகப்பெரிய பேசுபொருளானது. இதையடுத்து, இளையராஜாவின் தம்பியுமான கங்கை அமரன், வைரமுத்துவை கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார். தன்னை வளர்த்துவிட்ட இளையராஜாவின் போட்டோவை தினமும் வைத்து கும்பிடவேண்டும் என்றும். இனிமேல் இளையராஜாவைப் பற்றி அவமரியாதையாகப் பேசினால் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இளையராஜா இல்லை என்றால் இன்று வைரமுத்து என்ற பெயரே இருக்காது என்று பேசி இருந்தார்.

வேறு கேள்வி கேளுங்கள்: கங்கை அமரன் வைரமுத்துவை மிரட்டும் வகையில் பேசியது மிகப்பெரிய அளவில் புயலை கிளிப்பு வருகிறது. இந்நிலையில் மதுரையில் வணிகர்கள் விடுதலை முழக்க மாநாட்டில் கலந்து கொண்டு வந்த வைரமுத்துவிடம் செய்தியாளர்கள், இளையராஜா குறித்து கேள்வி கேட்டார்கள், அந்த கேள்வி வேண்டாம் வேறு கேளுங்கள் என்று வைரமுத்து சொல்லிக்கொண்டே இருக்க, தொடர்ந்து செய்தியாளர்கள் அதே கேள்வியை கேட்டதால், அது பற்றி நான் பேசக்கூடாது என்று சொல்லிவிட்டேன் என்றார்.

கண்ணதாசனா? எம்எஸ்வியா?: இதையடுத்து, மற்றொரு செய்தியாளர் கண்ணதாசனா? எம்எஸ்வியா? என்று செய்தியாளர்கள் கேட்டார். அதற்கு பதில் அளித்த வைரமுத்து, கண்ணதாசனா? எம்எஸ்வியா? என்று கேட்டால் உடலா... உயிரா.. என்ற பதில் தான் வரும். எம்.எஸ்.வி உயிராக இருந்திருக்கிறார். கண்ணதாசன் தமிழ் வழியாக உடலாக இருந்திருக்கிறார். உடலும், உயிரும் கூடி இயங்கியதால் தான் இலக்கியம் என்கிற குழந்தை பிறந்திருக்கிறது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X