வைரமுத்துவின் நாட்படு தேறல்… நாக்கு செவந்தவரே பாடல் வெளியானது!

சென்னை : கவிஞர் வைரமுத்துவின் பிரம்மாண்ட முயற்சியில் நாட்படு தேறல் என்ற தலைப்பில் 10 பாடல்கள் உருவாகி வருகின்றன. அதன் முதல் பாடலான நாக்கு செவந்தவரே பாடல் இன்று வெளியாகி உள்ளது.

இந்தப்பாடலை கீர்த்திகா உதயநிதி இயக்கி உள்ளார். வாகு மசான் இப்பாடலை பாடியும் இசையமைத்தும் உள்ளார்.

கலைஞர் தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பான இந்த பாடல் தற்போது வைரமுத்துவின் யூடியூப்பில் இடம் பெற்று அனைவரின் லைக்குகளை பெற்றுள்ளது.

பல கவிதை தொகுப்புகள்

வருடம் முழுக்க சாதனையை நோக்கி உழைத்துக் கொண்டிருப்பவர் கவிஞர் வைரமுத்து. சிறந்த கவிஞர் என்பதற்கு பல டஜன் கவிதைத் தொகுப்புகள் வைத்துள்ளார். சிறந்த பாடலாசிரியர் என்பதற்கு ஆயிரக்கணக்கான திரைப்பாடல்கள். சிறந்த எழுத்தாளர் என்பதற்கு கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம் உள்பட நாவல்கள், சிறுகதைகள். சிறந்த உரையாசிரியர் என்பதற்கு தமிழற்றுப்படை என இப்படிசொல்லிக் கொண்டே போகலாம்.

100 பாடல்கள்

100 இசையமைப்பாளர்கள், 100 இயக்குனர்கள், 100 பாடகர்களுடன் வைரமுத்துவின் 100 பாடல்கள் உருவாக்கப்பட உள்ளது. வாரம் ஒரு பாடல் வீதம், நாட்படு தேறல் என்ற தலைப்பின் கீழ் 100 பாடல்கள் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட உள்ளது.

நாக்கு செவந்தவரே

இந்நிலையில், நாட்படு தேறலின் முதல் பாடலான நாக்கு செவந்தவரே என்ற பாடல் கலைஞர் டிவி மற்றும் இசையருவி தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பானது. இப்பாடலுக்கு இயக்கம் கீர்த்திகா உதயநிதி, இசை மற்றும் குரல் வாகு மசான், ரிச்சார்ட் எம் நாதன், படத்தொகுப்பு லாரன்ஸ் கிஷோர் செய்துள்ளார். இந்தப்பாடல் வைரமுத்துவின் யூடியூப் தளம் மற்றும் பேஸ்புக் , ட்விட்டரில் காணலாம்.

இணையத்தில் வைரல்

இதன் தலைப்பு பாடல் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதன் தலைப்புப் பாடலுக்கு ஜெரார்ட் பெலிக்ஸ் இசையமைத்து இருந்தார். சங்கர் மகாதேவன் இப்பாடலை பாடி இருந்தார். தலைப்பு பாடலே இணையத்தில் மிகவும் வைரலாக பேசப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X