twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மேற்கு தொடர்ச்சி மலை...நாட்படு தேறல் மூன்றாவது பாடல் வரிகள் வெளியீடு

    |

    சென்னை : 100 இசையமைப்பாளர்கள், 100 இயக்குநர்கள், 100 பாடகர்கள் என்ற திட்டத்தோடு கவிஞர் வைரமுத்து 100 பாடல்களை எழுதியுள்ளார். அதற்கு நாட்படு தேறல் என்ற பெயரிட்டு வாரம் ஒரு பாடலை வெளியிட்டு வருகிறார்.

    Vairamuthu released Naatpadu Therals 3 rd song lyrics

    ஏப்ரல் 18 ம் தேதி நாக்கு செவந்தவரே என துவங்கும் முதல் பாடலும், ஏப்ரல் 25 ம் தேதி இந்த இரவு தீர்வதற்குள்ளே என துவங்கும் இரண்டாவது பாடலும் வெளியிடப்பட்டது. இந்த இரண்டு பாடல்களுமே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. தற்போது மூன்றாவது பாடலின் வரிகளை வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    உழைப்பாளர் தின சிறப்பு நிகழ்ச்சியாக மே 1 ம் தேதி மூன்றாவது பாடல் வெளியிடப்படும் எனவும், கலைஞர் டிவி.,யில் இந்த பாடல் ஒளிபரப்பு செய்யப்படும் எனவும் முன்னோட்டம் வீடியோ வெளியிடப்பட்டது. இந்நிலையில் பாடல் வரிகளை மட்டும் வைரமுத்து தற்போது, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    இந்த பாடலின் வீடியோ கலைஞர் டிவி.,யில் மே 1 அன்று வெளியிடப்பட உள்ளது. இந்த பாடலை அந்தோணி தாசன் இசையமைத்து பாடி உள்ளார். இந்த பாடலை கதிரவன் இயக்கி உள்ளார்.

    Vairamuthu released Naatpadu Therals 3 rd song lyrics

    வைரமுத்து வெளியிட்டுள்ள நாட்படு தேறலின் மூன்றாவது பாடலின் வரிகள் இதோ...

    மேற்கு தொடர்ச்சி மலை
    இளைச்சுப் போகும் - அந்த
    மேகாத்து மேல்மூச்சு
    வாங்கிப் போகும்

    மாசம் ஒருவாட்டி - நான்
    வருகபட்டி போகாட்டி
    வலது கைநீட்டி - நான்
    மலையோட பேசாட்டி

    வைகை நதிமேல - என்
    வலதுகை நனைக்காம
    வைகையில வெளையாடும்
    வாளமீனு தூங்காது

    பூமரத்து கீழ - நான்
    புதுப்பாட்டு எழுதாம
    பூமரத்தில் கூடுகட்டும்
    புறா இரை கொள்ளாது

    கத்தாழங் காடு - எங்
    கால்சூடு காங்காமக்
    கத்தாழம் புதரோட
    காடைமுட்டை போடாது

    மஞ்ளாறு அணையில் - நான்
    மலைக்காத்து வாங்காம
    மஞ்சளாத்து மூலையில
    மணிக்குருவி மேயாது

    கும்பக்கரைச் சாலையில
    கோமிய வாசம் புடிக்காம
    மண்டக்குள்ள மல்லுக்கட்டி
    மல்லியப்பூப் பூக்காது

    கெடையாட்டு மந்தையில
    கெடாக் கூத்துக் காங்காம
    காஞ்சுபோன பொழப்புக்குள்ள
    கற்பனையே கெளம்பாது

    சாதிசனம் பேசும் - மொழிச்
    சங்கீதம் கேளாம
    இதிகாச எழுத்துக்குச்
    சகவாசம் இருக்காது

    சுட்ட மீன் கவுச்சி - வந்து
    சுர்ருன்னு ஏறாம
    எண்சீர் விருத்தத்தில்
    ஏழாஞ்சீர் வாராது

    மலையைக் கொஞ்சம்
    கடிச்சுக் கிட்டே
    கூழ்குடிச்ச பூமியடா !

    மண்ணும் மழையும் - எங்க
    பரம்பரைக்கே சாமியடா !

    English summary
    Vairamuthu released Naatpadu Theral's 3 rd song lyrics in his official twitter page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X