விஜய்சேதுபதியின் க/பெ. ரணசிங்கம் செகண்ட் சிங்கிள்.. புன்னகையே பாடலை வெளியிட்ட வைரமுத்து!

சென்னை: கவிஞர் வைரமுத்துவின் வரிகளில் ஜிப்ரான் இசையில் உருவாகி உள்ள விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷின் க/பெ. ரணசிங்கம் படத்தின் 'புன்னகையே' பாடல் வெளியாகி உள்ளது.

இயக்குநர் விருமாண்டி இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் வலுவான கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது அந்த பாடலை வெளியிட்டுள்ளார்.

என்ன கதை

என்ன கதை

க/பெ. ரணசிங்கம் படத்தில் நாயகனாக விஜய்சேதுபதி நடித்து இருந்தாலும், கதைப்படி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தான் லீடு ரோலில் நடித்துள்ளார். கணவர் விஜய்சேதுபதிக்கு என்ன ஆனது? எதற்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படி யொரு வாழ்க்கை போராட்டத்தை சந்திக்கிறார் என்கிற வலுவான கதையை இயக்குநர் விருமாண்டி உருவாக்கி உள்ளார்.

கனா படத்திற்கு பிறகு

கனா படத்திற்கு பிறகு

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கனை கெளசல்யா முருகேசன் கதாபாத்திரத்தில் லீடு ரோலில் நடித்து இருந்தார். அந்த படத்தைத் தொடர்ந்து க/பெ. ரணசிங்கம் படத்திலும் லீடு ரோலில் நடித்துள்ளார். ஒட்டுமொத்த கதையும் அவரை சுற்றித் தான் நகர போகிறது என்பதை இந்த செகண்ட் சிங்கிள் உறுதிபடுத்தி இருக்கிறது.

புன்னகையே

புன்னகையே

கவிஞர் வைரமுத்துவின் வரிகளில் க/பெ. ரணசிங்கம் படத்தின் இரண்டாவது சிங்கிள் "புன்னகையே" என்ற பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் வலிகள் நிறைந்த வரிகளுடன் உருவாகி உள்ள இந்த பாடல் நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய தடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வைரமுத்து வெளியீடு

வைரமுத்து வெளியீடு

"க/பெ ரணசிங்கம் படத்தின் இரண்டாம் பாடல் இது. தமிழ்... இதயங்களுக்கு; இசை... செவிகளுக்கு. இந்தப் படம் சின்னதாய் ஒரு தாக்கம் நிகழ்த்தும் என்பது கலை வட்டாரத்தின் கணிப்பு. அது மெய்ப்பட வாழ்த்துகிறேன்." என தற்போது க/பெ. ரணசிங்கம் படத்தின் செகண்ட் சிங்கிளான "புன்னகையே" பாடலை வெளியிட்டு வைரமுத்து வாழ்த்தி உள்ளார்.

டிராக்டர் ஓட்டும் காட்சி

டிராக்டர் ஓட்டும் காட்சி

புன்னகையே புயலாய் மாறும் போது.. சிறு பூங்கிளியே புலியாய் நீயும் மாறு என வெறித்தனமான வரிகளை வைரமுத்து எழுத, பின்னணி பாடகர் சுந்தர் அய்யர் தனது வலிமையான குரலால் பாடலுக்கு மேலும் வலிமை சேர்த்துள்ளார். லிரிக் வீடியோவில் ஷூட்டிங் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. கடைசியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் டிராக்டரில் ஏறி ஓட்டும் காட்சிகள் தரமான சம்பவமாக இருக்கும் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

ஒடிடி ரிலீஸ்

ஒடிடி ரிலீஸ்

இயக்குநர் விருமாண்டி இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஜி.வி. பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ள க/பெ. ரணசிங்கம் திரைப்படம் வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஜி பிளெக்ஸ் ஒடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X