சூப்பர் ஸ்டார் சம்மதத்தோடு வைரமுத்து வெளியிட்ட கோச்சடையான் பாட்டு!

By Shankar

Vairamuthu
கோச்சடையான் படத்துக்காக தான் எழுதிய பாடலை சூப்பர் ஸ்டார் ரஜினி சம்மதத்தோடு கவிஞர் வைரமுத்து இன்று வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து வைரமுத்து ட்விட்டரில் எழுதியிருப்பதாவது:

ரஜினியின் கோச்சடையான் படத்தில் நான் எழுதிய ஒரு பாடலை ரஜினியின் சம்மதத்தோடு வெளியிடுகிறேன்.

சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறார் தளபதி இளைய ரஜினி. அழுதுபாடுகிறாள் அவர் காதலியான இளவரசி தீபிகா படுகோனே. சரித்திரக் கதையாதலால், சங்கத் தமிழில் நடக்கிறது பாட்டு:

தீபிகா:

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில்
மந்தி உருட்டும் மயிலின் முட்டையாய்...
இதயம்
உடலில் இருந்து விழுந்து
உருண்டு புரண்டு போகுதே

நல்ல மரத்தின் நறுங்கிளை யிழிந்து
வெள்ளச் சுழியில் விழுந்து மலராய்...

இதயம்
கரைகள் மறந்து
திசைகள் தொலைந்து அலைந்து போகுதே

சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கு
என் உயிரோ சிறிதே
காதலோ பெரிதே

ரஜினி:

பூப்பது மறந்தன கொடிகள்
புன்னகை மறந்தது மின்னல்
காய்ப்பது மறந்தது காடு
காவியம் மறந்தது ஏடு
யானோ நின்னை மறக்கிலேன்

செந்தமிழ் பிரியும் சங்கம்
செங்கடல் பிரியும் அலைகள்
ஒலியைப் பிரியும் காற்று
உளியைப் பிரியும் சிற்பம்
யானோ நின்னைப் பிரிகிலேன்

வாய் மொட்டுடைந்தால் பூவாசம்
வாசத்துக்கேது சிறைவாசம் ?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X