Gentleman 2 - ஜென்டில்மேன் 2 - பாடலாசிரியர் வைரமுத்து கொடுத்த அப்டேட்.. இது லிஸ்ட்லயே இல்லையே
சென்னை: Gentleman 2 (ஜென்டில்மேன் 2) ஜென்டில்மேன் 2 படம் உருவாகிவருவதாக பாடலாசிரியர் வைரமுத்து தெரிவித்திருக்கிறார்.
பிரமாண்ட இயக்குநர் என்று பெயர் எடுத்தவர் ஷங்கர். அவர் ஜென்டில்மேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கடந்த ஆம் ஆண்டு வெளியான அப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. படத்தில் அர்ஜுன், கவுண்டமணி, மதுபாலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். டி.குஞ்சுமோன் தயாரித்திருந்தார்.

கதையில் சிக்கல்: முதல் படமே பெரும் வெற்றி பெற்றதன் காரணமாக ஷங்கர் மீது ஒட்டுமொத்த கோலிவுட்டின் கவனமும் குவிந்தது.அதேசமயம் அந்தப் படத்தில் கதையில் பலருக்கும் இன்றுவரை உடன்பாடு இல்லை. ஹீரோ கொள்ளையடிக்கிறார் என்ற லைனை வைத்துக்கொண்டாலும் ஹீரோவை வைத்து ஷங்கர் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்தை பதிவு செய்துவிட்டாரோ என்ற பேச்சு இன்றுவரை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
கமல் நடித்திருக்க வேண்டியது: அதேபோல் ஜென்டில்மேன் படத்தில் முதன்முறையாக நடித்திருக்க வேண்டியது கமல் ஹாசன். ஆனால் இந்தக் கதையில் சிக்கல் இருக்கிறது அதனால் தான் நடித்தால் சர்ச்சையாகிவிடும் என யோசித்த கமல் நடிக்க மறுத்துவிட்டார். இருப்பினும் கதையில் சில மாற்றங்களை செய்யவும் ஷங்கருக்கு கமல் ஹாசன் அறிவுறுத்தியிருந்தார். ஆனால் ஷங்கரோ எந்த மாற்றமும் செய்யவில்லை.
ஜென்டில்மேன் 2: இந்நிலையில் ஜென்டில்மேன் 2 படம் உருவாகுமா என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பிவந்தனர். ஆனால் அதற்கு ஷங்கரோ எந்த ரெஸ்பான்ஸும் கொடுக்காமல் இருந்தார். அதேசமயம் இந்தியன் படத்தின் 2ஆம் பாக ஷூட்டிங்கில் அவர் பிஸியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருகக் ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பது உறுதியாகியிருக்கிறது.
வைரமுத்து சொன்ன அப்டேட்: இதுகுறித்து பாடலாசிரியர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் டி.குஞ்சுமோனுடன் இருக்குஜ்ம் புகைப்படத்தை பகிர்ந்து, "கொச்சியில் இருக்கிறேன ஜென்டில்மேன் 2 படத்திற்குப் பாட்டெழுதுகிறேன் ஆஸ்கர் விருதுக்குப் பிறகு
கீரவாணி(மரகதமணி) இசையமைக்கும் முதல் தமிழ்ப்படம்
நாட்டுக்கு அர்ப்பணிப்பு: அதிகாலைப் பறவைகளாய்ப் பாடிக்கொண்டிருக்கிறோம் கோகுல் கிருஷ்ணா இயக்குகிறார் குஞ்சுமோன் படத்துக்குக் குறையிருக்குமா பாட்டுக்கு? விரைவில் அர்ப்பணிக்கிறோம் நாட்டுக்கு" என குறிப்பிட்டுள்ளார் வைரமுத்துவின் இந்த ட்வீட் தற்போது ட்ரெண்டாகியுள்ளது. மேலும் படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற மேலதிக விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











