பாட்ஷா படத்தின் “எட்டு எட்டா மனுஷ வாழ்வப் பிரிச்சிக்கோ” பாடலை 8 நிமிடத்தில் எழுதினேன் - வைரமுத்து!
சென்னை: சுரேஷ் கிருஷ்ணா இயகக்த்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன், ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் 1995ம் ஆண்டு வெளியாகி ஓராண்டு வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிய பாட்ஷா திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகளை கடந்த நிலையில், அந்த படத்திற்காக பாடல்களை எழுதிய பாடலாசிரியர் வைரமுத்து பல சுவாரஸ்ய தகவல்களை கவிதை வடிவில் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆருக்கு நாடோடி மன்னன் படத்தை போல ரஜினிகாந்துக்கு பாட்ஷா படம் என்றும் குறிப்பிட்டுள்ளார். பாட்ஷா படத்தை போல தங்களுக்கும் ஒரு படம் வேண்டும் என அஜித் குமார், விஜய், சூர்யா உள்ளிட்ட பலர் முயற்சி செய்து பல படங்களை எடுத்தாலும், பாட்ஷா படம் அளவுக்கு எந்தவொரு படமும் வெளியாகாதது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில், திரையரங்குகளில் 4கே தொழில்நுட்பத்துடன் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட பாட்ஷா திரைப்படம் குறித்த தகவல் அறிந்ததும் தனது நினைவுகளை வைரமுத்து பகிர்ந்துள்ளார்.
8 நிமிடத்தில் எழுதிய பாடல்: பாட்ஷா படத்தில் ஏகப்பட்ட தத்துவங்களை உள்ளடக்கிய "ரா ரா ராமையா பாடலில் எட்டு எட்டா மனுஷ வாழ்வப் பிரிச்சிக்கோ" என்ற பாடலை வெறும் எட்டே நிமிடங்களில் எழுதியிருப்பதாகவும், தங்கமகன் பாடலை ஜேசுதாஸ் பிழையுடன் பாடியுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
"பாட்ஷா படத்தின்
மறு வெளியீடு
சில தகவல்களைப்
பரிமாறுமாறு கூறுகிறது
"எட்டு எட்டா மனுஷ வாழ்வப் பிரிச்சுக்கோ" என்றபாட்டு
அவசரம் கருதி
எட்டே நிமிடத்தில் எழுதப்பட்டது
"தங்க மகன் இன்று
சிங்க நடை போட்டு" என்றபாட்டு
ஆண் குரலுக்காக மட்டும்
அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு
ஜேசுதாசால் பாடப்பட்டுப்
பதிவு செய்யப்பட்டது
அதில்
'ரெண்டு புறம் பற்றி
எரியும் மெழுகாக' என்ற வரியை
'ரண்டு' புறம் என்று
பாடியிருக்கிறார் பாடகர்
நான் எவ்வளவோ முயன்றும்
அதை மீண்டும்
திருத்த இயலவில்லை
அமெரிக்காவில் இருந்து
வைரமுத்து வரட்டும் என்று
பாராட்டு விழாவைத்
தள்ளி வைத்திருந்தார் ரஜினி
எம்.ஜி.ஆரின் உச்சம்
நாடோடி மன்னன்
ரஜினியின் உச்சம் பாட்ஷா
இந்த இரண்டு
வெற்றிப் படங்களிலும்
சம்பந்தப்பட்டவர் ஆர்.எம்.வீ
என்று பாராட்டினேன்
"இந்த நாட்டை
ஆண்டவனாலும்
காப்பாற்ற முடியாது"
என்ற சர்ச்சைப் பேச்சுப்
பேசப்பட்டதும் அங்கேதான்
ஆர்.எம்.வீரப்பனின்
அமைச்சர் பதவி
பறிக்கப்பட்டதும்
அதைத் தொடர்ந்துதான்
தமிநாட்டின்
கலை அரசியலோடு
கலந்துபோன படம் பாட்ஷா
அதில்
எனக்குப் பிடித்தது
சண்டைக்குத் தயாராகும்முன்
ரஜினி சொல்லும் வசனம்
"உள்ளே போ"
இப்போது பார்த்தாலும்
நரம்பு முறுக்கேறி
இரும்பாகிவிடுகிறது
இதை ரஜினியிடமே சொல்லியிருக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











