அழகிய சிறுக்கி.. அருவா மூக்கி.. வாரி அணைக்கும் வைரமுத்துவின் வரிகளில்.. வைரலான ரணசிங்கம் சிங்கிள்!

By Mathivanan Maran

சென்னை: தொட்டுத் தொடரும்னு சொல்வாங்க இல்லையா.. அது மாதிரி.. "அழகிய சிறுக்கி.. அருவா மூக்கி.." இந்த வரிகளில் தொடங்கி.. கடைசி புள்ளி வரைக்கும் பாயும் வைர வரிகளில் உயிரைத் தொட்டு அப்படியே தொக்கி நிற்கிறது.. கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகளில் உருவாகி வெளியாகியுள்ள க/பெ ரணசிங்கம் பட சிங்கிள் பாடல்.

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான இயக்குநர் பெ. விருமாண்டியின் க/பெ ரணசிங்கம் திரைப்படத்தின் சிங்கிள் வெளியாகி பட்டையைக் கிளப்பியுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு உயிர் பிடித்து இறுக்கி அணைக்கும் காதல் பாடல் என்று ரசிகர்கள் இதைக் கொண்டாடி வருகின்றனர். பாடல் வெளியிடப்பட்டது.

Vairamuthus Alagiya Sirukki Lyric in Ka Pae Ranasingam

இந்த படத்துக்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். இசையில் துள்ளலும், வரிகளில் வாளிப்பும் கலந்து கிராமத்துக் காதல் சிறுக்கியை கண்ணுக்குள் கொண்டு வந்து நிறுத்தி வைத்து அழகு பார்த்துள்ளார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்துள்ள நல்லதொரு துள்ளல் கலந்த கிராமத்து காதல் பாடலாக இது ரசிகர்களின் மனதைத் தொட்டு விளையாடிக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக வைரமுத்து தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், மீண்டும் ஒரு கருவேலங்காட்டுப் பாட்டு. உங்கள் கண்களுக்கும் காதுகளுக்கும். படம் : க/பெ ரணசிங்கம். என பகிர்ந்துள்ளார். ஆ

இயக்குநர் சேரனின் பொற்காலம் திரைப்படத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவின் கருவேலங்காட்டுப் பாடல் உன்னதமான கிராமத்து துள்ளல் கீதம். அதேபோல இன்னொரு தூள் கிளப்பும் பாடலாக அழகிய சிரிக்கி..அருவா மூக்கி பாடம் இடம்பெற்றிருக்கிறது.

இசை கோர்ப்புகளில் பாடல் வரிகள் சிக்கிக் கொள்ளாமல் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வகையில் அழகிய சிறுக்கி.. அருவா மூக்கி பாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது... படிச்ச வேகத்தில் அந்தப் பாட்டைக் கேட்டுப் பாருங்களேன்.. சத்தியமா சொல்றோம்.. மறுபடியும் மறுபடியும் கேட்பீங்க.. .போங்க போய் கேட்டுப் பார்த்துட்டு வந்து கமெண்ட் சொல்லுங்க.. !

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X