கன்னிப் பெண்கள் கூட்டம் .. கண்ணன் நடுவினிலே.. யாரை சொல்கிறார் கங்கை அமரன்!

சென்னை : இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரன், தனது ட்விட்டர் பக்கத்தில் கங்கை கரை தோட்டம் கன்னிப்பெண்கள் கூட்டம் என ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவு இணையத்தில் பேசுபொருளாகி பலரும் கங்கை அமரனின் பதிவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ட்விட்டர் பக்கத்தில் இந்த விவகாரம் தான் தற்போது ஹாட் டாப்பிக்காக உள்ளது.

‘தடை உடை‘

‘தடை உடை‘

நடிகர் பாபி சிம்ஹா தடை உடை என்ற புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். அறிமுக இயக்குநர் என்.எஸ். ராகேஷ் இயக்கும் இந்தப் படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக நடிகை மிஷா நராங் நடிக்கிறார். முத்ராஸ் பிலிம் பேக்டரி மற்றும் ஆருத்ரா பிக்சர்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் பி. ராஜசேகர் மற்றும் ரேஷ்மி சிம்ஹா தயாரிக்கிறார்கள். டெமல் சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஆதிஃப் இசையமைக்கிறார்.

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

இப்படத்தின் பூஜையில் கலந்து கொண்ட வைரமுத்து அந்த புகைப்படத்தை தனது ட்விட்டரில் பதிவிட்டு, பாபி சிம்ஹா நடிக்கும் புதிய படத்திற்கு தடை உடை என்று பெயர் வைத்தேன். படப்பிடிப்பையும் தொடங்கி வைத்தேன். இந்தப் படத்தில் பணிபுரியும் கலைஞர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் மாலை சூட்டி மகிழ்ந்தார்கள். சின்னச் சின்னக் கொண்டாட்டங்களே வாழ்க்கை என்று அதில் பதிவு செய்திருந்தார்.

கண்ணன் நடுவினிலே

கண்ணன் நடுவினிலே

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானதை அடுத்து, போட்டோவை டேக் செய்த இசையமைப்பாளர் கங்கை அமரன், கங்கை கரை தோட்டம் கன்னிப்பெண்கள் கூட்டம்...கண்ணன் நடுவினிலே என வைரமுத்துவை கிண்டலடிக்கும் வகையில் ஒரு பதிவினை பகிர்ந்து இருந்தார்.

மனம் புண்படாதா?

மனம் புண்படாதா?

இந்த பதிவினைப் பார்த்த ரசிகர்கள் கங்கை அமரனை கண்டபடி விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர். மேலும் ஒரு ரசிகர், இந்த பதிவினை பார்த்தால், அய்யா கவிஞரின் மனது புண்படாதா? நீங்கள் அவரின் நல்ல நண்பர் ஆயிற்றே என்று கேட்டுள்ளார்.

நண்பர்கள்தான்

நண்பர்கள்தான்

இதற்கு பதிலளிக்கும் வகையில்,கங்கை அமரன், நாங்க இப்படியெல்லாம் பேசிக்கொள்ளும் நண்பர்கள்தான் ... இப்போதும் கூட என கூறியுள்ளார். என்னத்தான் நண்பர்களாக இருந்தாலும் பொது இடத்தில் ஒருவரை இப்படி விமர்சிப்பது அநாகரிகமானது. இந்த பதிவை வைரமுத்து கூட ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று கூறிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X