ஏழை வீட்டில் பூப்புனித நீராட்டு விழா.. வைரமுத்துவின் ’அன்னம்மா பெத்தவளே’ எப்போ வெளியாகுது தெரியுமா?
சென்னை: நாட்படு தேறல் முதல் பருவத்தை தொடர்ந்து நாட்படு தேறல் இரண்டாம் பருவ பாடல்களை தயாரித்து வெளியிட்டு வருகிறார் பாடலாசிரியர் வைரமுத்து.
நாட்படு தேறல் இரண்டாம் பருவத்தின் முதல் பாடலில் பிக் பாஸ் பிரபலம் அக்ஷரா ரெட்டி நடித்திருந்தார். ரோஜாவே தமிழ் பேசு என தொடங்கிய அந்த பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
அடுத்ததாக மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய ஆயிரம் தான் கவி சொன்னேன் பாடல் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.

கடந்த வாரம் கொண்டல் மேகம் எனும் 3வது பாடலை வெளியிட்டு இருந்தார் பாடலாசிரியர் வைரமுத்து. இந்நிலையில், நாட்படு தேறல் 4வது பாடலாக 'அன்னம்மா பெத்தவளே' பாடல் வரும் ஞாயிற்றுக்கிழமை மே 8ம் தேதி கலைஞர் தொலைக்காட்சி மற்றும் வைரமுத்துவின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளியாகிறது.
ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு கதையை உருவாக்கி அதனை ரசிக்கும்படியாக உருவாக்கி வருகிறார் வைரமுத்து. 100 பாடல்கள், 100 பாடகர்கள், 100 இயக்குநர்கள் என்கிற உயர்ந்த நோக்கத்தோடு ஒவ்வொரு பாடலும் புதிய அணியுடன் புதுமையாக உருவாகி வருகிறது.
ஏழை வீட்டில் பெண் பூப்பெய்தி விட்டாள் அங்கே என்ன நடக்கும், மாமன் வர வேண்டும் என்றால் ஜாமீனில் தான் வர வேண்டும் என்கிற நிலையில், உள்ள ஒரு வீட்டில் நடக்கும் பூப்புனித நீராட்டு விழா எத்தனை சிக்கல்களையும், வறுமையில் வாழும் ஏழை குடும்பத்து பெண்கள் வயசுக்கு வரும் நிகழ்வு எப்படிப்பட்ட கொடுமை என்பதை விளக்கும் விதமாக இந்த பாடல் உருவாகி உள்ளதாக அதுபற்றிய குறிப்புகளை வைரமுத்து வீடியோ வெளியிட்டு கூறியுள்ளார்.
Recommended Video
வரும் ஞாயிற்றுக்கிழமை அன்னம்மா பெத்தமகளே பாடல் முழுவதுமாக வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











