Don't Miss!
- News
வருமான வரித்துறையிடம் எனக்கு லவ் லெட்டர் வந்திருக்கிறது.. ஐடி நோட்டீஸ் குறித்து சரத்பவார் கிண்டல்
- Lifestyle
மிதுனம் செல்லும் புதனால் அடுத்த 15 நாட்கள் இந்த ராசிகளுக்கு செம சூப்பரா இருக்கப் போகுது...
- Finance
தங்கம் ஆர்வலர்கள் பெரும் ஷாக்.. இறக்குமதி 5% அதிகரிப்பு.. இனி விலை என்னவாகும்
- Automobiles
இந்தியா தயாரித்த விகாஸ் இன்ஜினுக்கு இவ்ளோ சக்தி இருக்கா? ராக்கெட்ரி படத்தில் சொல்லப்படாத ரகசியம்!
- Technology
உடனே நீக்குங்கள், அது சுத்தமான சீன உளவு செயலி: Google, Apple க்கு கடிதம்!
- Sports
யாரும் எடுக்காத துணிச்சல் முடிவு..? இந்திய ப்ளேயிங் 11ல் அஸ்வினின் நிலை என்ன?- டிராவிட்டின் ஐடியா
- Travel
தென் கைலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைகளுக்குள் ஒரு ஆன்மீகப் பயணம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
ரோஜாவே தமிழ் பேசு.. வைரமுத்துவின் நாட்படு தேறல் 2 ஆரம்பம்.. அக்ஷரா ரெட்டி அசத்தல்!
சென்னை: வைரமுத்துவின் நாட்படு தேறல் பகுதி 2 "ரோஜாவே தமிழ் பேசு" எனும் அழகான பாடல் உடன் ஆரம்பமாகி உள்ளது.
நேற்று இந்த பாடலின் முன்னோட்டம் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது முழு பாடலும் வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு அசத்திய அக்ஷரா ரெட்டி சிகப்பு நிற கவுன் அணிந்து அப்படியே ரோஜா போல இந்த பாடலில் நடித்து அசத்தி உள்ளார்.
பீஸ்ட்
பார்ட்
2
க்கு
பிளான்
பண்ணுறாரா
நெல்சன்...விஜய்
ஓகே
சொல்வாரா?

நாடுபடு தேறல் 2
பாடலாசிரியர் வைரமுத்துவின் வரிகளில் உருவாகி உள்ள நாட்படு தேறல் பாடல் தொகுப்பு ஆல்பம் பாடல்களாக மாறி வருகின்றன. அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட பிரபலங்கள் முதல் சீசன் பாடலில் நடித்திருந்தனர். இந்நிலையில், நாட்படு தேறல் இரண்டாம் பாகத்திற்கான பணிகளை வைரமுத்து செய்து வருகிறார்.

அழகு அக்ஷரா
பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு வருணின் தோழியாக வலம் வந்தவர் நடிகை அக்ஷரா ரெட்டி. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அக்ஷரா ரெட்டி நடித்துள்ள ஆல்பம் பாடல் இது. சிகப்பு நிர கவுன் அணிந்து கொண்டு அப்படியே பேசும் ரோஜாவாக தனது அழகான பர்ஃபார்மன்ஸை வெளிப்படுத்தி உள்ளார்.

பாடல் முன்னோட்டம்
ரோஜாவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடலில் நடிகை அக்ஷரா ரெட்டி அழகு பதுமையாக நடித்துள்ளார். அதன் அழகான முன்னோட்ட வீடியோவை கவிஞர் வைரமுத்து நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். ஏகப்பட்ட ரசிகர்கள் அந்த பாடலை பார்த்து அவரை பாராட்டினர்.

க்ரீன் மேட் மேஜிக்
நாட்படு தேறல் இரண்டாவது பருவம் வெளியாகி உள்ள நிலையில், இந்த பாடல் முழுவதையும் அதன் இயக்குநர் க்ரீன் மேட் தொழில் நுட்பத்திலேயே உருவாக்கி உள்ளனர். க்ரீன் மேட்டில் அக்ஷரா ரெட்டி நடனமாட அதை அப்படியே சிஜியில் அழகான ரோஜா மலர்கள் நிறைந்த நந்தவனமாகவும், பனி பிரதேசமாகவும் மாற்றி பட்டையைக் கிளப்பி உள்ளார்.

ரோஜாவே தமிழ் பேசு
நேற்று இந்த பாடலின் முன்னோட்ட பாடல் வெளியான நிலையில், ஏப்ரல் 17 ஞாயிற்றுக்கிழமையான இன்று இந்த பாடலின் முழு வீடியோ பாடலும் வெளியாகி உள்ளது. ரோஜாவே தமிழ் பேசு என தொடங்கும் இந்த பாடலை பாம்பே ஜெயஸ்ரீ பாடியுள்ளார். ரமேஷ் தமிழ்மணி இசையமைத்து பாடலை இயக்கி உள்ளார்.

பெரிய தத்துவம்
"ரோஜாப் பூ என்ற சின்னஞ்சிறு மலர்கொண்டு பெரிய பெரிய தத்துவத்தைப் பேச முயல்கிறது இந்த பூம் பாட்டு." என வைரமுத்து இந்த பாடல் குறித்த விளக்கத்தை கொடுத்துள்ளார். நாட்படு தேறல் மூலமாக 100 பாடல்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார் வைரமுத்து. 100 இசையமைப்பாளர்கள், 100 பாடகர்கள், 100 இயக்குநர்கள் என ஒரு பெரிய முயற்சியை செய்து வருகிறார் வைரமுத்து.