உழைப்பாளர் தின சிறப்பு...வைரமுத்துவின் நாட்படு தேறல் மூன்றாவது பாடல் வெளியீடு
சென்னை : கவிஞர் வைரமுத்து, தனது வரிகளில் 100 பாடல்களை 100 இயக்குனர்கள், 100 பாடகர்கள், 100 இசையமைப்பாளர்கள் என்ற புதிய முயற்சியை மேற்கொண்டு வருகிறார். நாட்படு தேறல் என்ற தலைப்பில் வைரமுத்துவின் வரிகளில் அமைந்த பாடல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இப்பாடல்களை வாரத்திற்கு ஒரு பாடல் என 100 வாரங்களுக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளார் வைரமுத்து. ஏப்ரல் 18 ம் தேதி நாட்படு தேறலின் முதல் பாடல் வரிகளும், அதைத் தொடர்ந்து பாடல் வீடியோவும் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் 25 ம் தேதி, இந்த இரவு தீர்வதற்குள்ளே என துவங்கும் இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டது.

வைரமுத்துவின் முதல் இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், உழைப்பாளர் தின சிறப்பாக மே 1 ம் தேதியான இன்று, மேற்கு தொடர்ச்சி மலை என துவங்கும் மூன்றாவது வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலின் வரிகளை 2 நாட்களுக்கு முன் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
கலைஞர் டிவி.,யில் ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்த பாடல், வைரமுத்துவின் யூட்யூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல், வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான பார்வைகளையும், லைக்குகளையும் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











