twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வைரமுத்துவின் நாட்படு தேறல் 8வது பாடல்… 3 தலைமுறையின் தாலாட்டுப்பாடல் வெளியீடு!

    |

    சென்னை : கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறல் பாடல் தொகுப்பின் 8வது பாடல் இன்று வெளியாகி உள்ளது.கவிஞர் வைரமுத்துவின் பிரம்மாண்ட முயற்சியாக, தனது வரிகளில் 100 பாடல்களை உருவாக்கி வருகிறார். நாட்படு தேறல் என்ற தலைப்பில் 100 பாடல்களை அவர் உருவாக்கி வருகிறார்.

    Vairamuthu’s naatpadu theral 8th song releases today

    100 இசையமைப்பாளர்கள், 100 இயக்குனர்கள், 100 பாடகர்களுடன் வைரமுத்துவின் 100 பாடல்கள் உருவாக்கப்பட உள்ளது. வாரம் ஒரு பாடல் வீதம் , நாட்படு தேறல் என்ற தலைப்பின் கீழ்100 பாடல்கள் உருவாக்கப்பட்டு, வெளியாகி வருகின்றன.

    இன்று எட்டாவது பாடல் வெளியாகி உள்ளது. அதில், ஒரே பாட்டுக்குள் மூன்று தலைமுறைகளின் தாலாட்டுப்பாடல்.

    வண்ண வண்ண கோமளமே

    வலதுகை மாம்பழமே

    இனம் பெருத்த வம்சத்தில்

    சனம் பெருத்த குடும்பத்தில்

    ஆறாம் திருமகனாய்

    ஆளவந்த சோழமன்னா

    புள்ளிமான் கோம்பையில

    புலிவந்து போகுதின்னு

    பொன்வேல் கைவாங்கிப்

    புலியெறிய வந்தவனே

    சித்தெறும்பு கடிச்சாலும்

    சித்தப்பா வருவாக

    தாங்கித் தோள்மாத்தத்

    தாய் மாமான் வருவாக

    தாத்தாமார் தூக்கிவச்சாத்

    தாடிமுடி குத்துமின்னு

    அள்ளி அள்ளி மார்பணைக்க

    ஐந்தமார் வருவாக

    பாட்டு பலபடிச்சு

    பால்சோறு ஊட்டிவிடும்

    கூட்டு குடும்படமா

    குலவிளக்கே கண்ணுறங்கு

    5 ஆண்டு கொண்டாட்டத்தில் இறைவி படம் நினைவுகூர்ந்த கார்த்திக் சுப்புராஜ், எஸ்ஜே சூர்யா, விஜய் சேதுபதி5 ஆண்டு கொண்டாட்டத்தில் இறைவி படம் நினைவுகூர்ந்த கார்த்திக் சுப்புராஜ், எஸ்ஜே சூர்யா, விஜய் சேதுபதி

    3 தலைமுறையின் வாழ்வியல் மாற்ற தாலாட்டுப்பாடலை, பி.சுசீலா, சித்ரா ஹரிணி ஆகியோரின் குரலில் இந்த பாடல் வெளியாகி உள்ளது. ஏ.என்.ரகுநந்தன் இசையமைத்துள்ள இந்த பாடலில் ரித்விகா நடித்துள்ளார்.

    English summary
    Vairamuthu’s naatpadu theral 8th song releases today
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X