Don't Miss!
- Finance
அதானி குழுமத்திற்கு ஜாக்பாட் நியூஸ்.. அபுதாபி நிறுவனம் ரூ.3200 கோடி முதலீடு செய்ய திட்டம் !
- News
FIRக்கு எஸ்பி அனுமதி தேவையில்லை.. டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு - பின்னணி என்ன?
- Sports
ரிஷப் பண்ட்-ன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. உடல்நிலை குறித்து அட்டகாச அப்டேட்.. ஆனாலும் ஒரு குறை
- Lifestyle
February Horoscope 2023: பிப்ரவரி மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்பட போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
- Automobiles
ஐஆர்சிடிசில பஸ் டிக்கெட் புக் பண்ணா இவ்வளவு லாபமா? எப்படி பண்ணணும் தெரியுமா?
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
ஆயிரம்தான் கவி சொன்னேன்...நாட்டுபடு தேறல் 2ம் பாகம்...எஸ்பிபி.,க்காக உருகும் வைரமுத்து
சென்னை : கவிஞர் வைரமுத்துவின் வைர வரிகளில் நாட்டுப்படு தேறல் இரண்டாம் பாகத்தில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பற்றி, ஆயிரம் தான் கவி சொன்னேன் என்ற தலைப்பில் உருக்கமாக பாடல் உருவாக்கி உள்ளார்.
நாட்படு தேறல் மூலமாக 100 பாடல்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார் வைரமுத்து. 100 இசையமைப்பாளர்கள், 100 பாடகர்கள், 100 இயக்குநர்கள் என ஒரு பெரிய முயற்சியை செய்து வருகிறார் வைரமுத்து. நாட்டுப்படு தேறலின் முதல் பாகம் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.
வைரமுத்து வரிகளில்.. பிக் பாஸ் பிரபலம் நடனமாடிய நாட்படு தேறல் பாடல்.. நாளை ரிலீஸ்!

ஆல்பமாக மாறும் நாட்படு தேறல்
பாடலாசிரியர் வைரமுத்துவின் வரிகளில் உருவாகி உள்ள நாட்படு தேறல் பாடல் தொகுப்பு ஆல்பம் பாடல்களாக மாறி வருகின்றன. அனிகா சுரேந்திரன், ரித்விகா உள்ளிட்ட பிரபலங்கள் முதல் பாகத்தின் பாடலில் நடித்திருந்தனர். இந்நிலையில், நாட்படு தேறல் இரண்டாம் பாகத்திற்கான பணிகளை வைரமுத்து செய்து வருகிறார். இரண்டாம் பாகத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

ரோஜாவே தமிழ் பேசு
ரோஜாவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள முதல் பாடலில் நடிகை அக்ஷரா ரெட்டி அழகு பதுமையாக நடித்திருந்தார். அதன் அழகான முன்னோட்ட வீடியோவை கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த பாடல் முழுவதையும் அதன் இயக்குநர் க்ரீன் மேட் தொழில் நுட்பத்திலேயே உருவாக்கி இருந்தார். க்ரீன் மேட்டில் அக்ஷரா ரெட்டி நடனமாட அதை அப்படியே சிஜியில் அழகான ரோஜா மலர்கள் நிறைந்த நந்தவனமாகவும், பனி பிரதேசமாகவும் மாற்றி அசத்தி இருந்தனர்.

ஆயிரம் தான் கவி சொன்னேன்
ஏப்ரல் 17 ஞாயிற்றுக்கிழமை இந்த பாடலின் முழு வீடியோ பாடலும் வெளியானது. ரோஜாவே தமிழ் பேசு என தொடங்கும் இந்த பாடலை பாம்பே ஜெயஸ்ரீ பாடி இருந்தார். ரமேஷ் தமிழ்மணி இசையமைத்து பாடலை இயக்கி இருந்தார். இந்நிலையில் இரண்டாம் பாடல் ஏப்ரல் 24 ம் தேதி வெளியிடப்பட உள்ளது. ஆயிரம்தான் கவி சொன்னேன் என்ற தலைப்பில் எஸ்பிபி பற்றி வைரமுத்து எழுதி உள்ளார்.
Recommended Video

எஸ்பிபி பற்றி கவிப்பேரரசு உருக்கம்
இதுபற்றி இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள வைரமுத்து, ஏப்ரல் 24 இரண்டாம் பாடல், ஆயிரம் தான் கவி சொன்னேன். உயிர் கொடுத்துப் பாடிவிட்டு உயிரை விட்டு விட்டார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். மரணத்தை வெல்வதுதானே கலையின் வேலை. அதை இந்த பாடல் செய்திருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். இந்த பாடல் ஏப்ரல் 24 ம் தேதி இசையருவி சேனலில் வெளியிடப்பட உள்ளது.