'பலருக்கும் அவர் நம்மவர், எனக்கு நல்லவர்..' கமல் பிறந்த நாளுக்கு வைரமுத்து டச்சிங் வாழ்த்து!

By

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, கவிஞர் வைரமுத்து டச்சிங்கான வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் 66 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

அவர் ரசிகர்களும் மக்கள் நீதி மய்யம் தொண்டர்களும் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.

திறந்த வேனில்

திறந்த வேனில்

அவர் வீட்டின் முன்பு கூடிய ஆயிரக்கணக்கான ரசிகர்களும் தொண்டர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். திறந்த வேனில் வந்த கமல்ஹாசன் தொண்டர்களையும் ரசிகர்களையும் சந்தித்தார். அவர்களின் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டார். சமூக வலைத்தளங்களிலும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

கம்பீரமாக கமல்

கம்பீரமாக கமல்

அவர் பிறந்த நாளை முன்னிட்டு, சில நாட்களுக்கு முன் காமன் டிபியை 'மாஸ்டர்' பட இயக்குநர் லோகேஷ் கனகராஜும் ஸ்ருதி ஹாசனும் வெளியிட்டனர். கவச உடைகளை அணிந்து கொண்டு, ஸ்டைலாகவும் கம்பீரமாகவும் ராஜா போல தோற்றமளிக்கும் கமல் அதில் மிரட்டலாக இருக்கிறார்.

கமலின் 232 வது படம்

கமலின் 232 வது படம்

அந்த காமன் டிபி, டிரெண்டானது. விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கி உள்ள லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் படத்தின் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். அந்தப் படத்தின், டைட்டில் இன்று மாலை வெளியிடப்பட இருக்கிறது. இது கமல்ஹாசன் நடிக்கும் 232 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

குவியும் வாழ்த்து

குவியும் வாழ்த்து

இதற்கிடையே ரசிகர்கள், #HappyBirthdayKamalHaasan மற்றும் #HBDKamalHaasan என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். இந்த ஹேஷ்டேக்கில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். பல சினிமா பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தீபங்களை ஏற்றுவது

தீபங்களை ஏற்றுவது

இந்நிலையில் பிரபல கவிஞர் வைரமுத்து, கமல்ஹாசனுக்கு போனில் பிறந்த நாள் வாழ்த்தைத் தெரிவித்துள்ளார். பின்னர் ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

பிறந்தநாள் என்பது
சில மெழுகுவத்திகளை அணைப்பதல்ல;
சில தீபங்களை ஏற்றுவது.

இருளைப் புறங்காண
தீபங்கள் ஏற்றத் தெரிந்தவர்
நண்பர் கமல்ஹாசன்.

தொலைபேசியில்
அழைத்து வாழ்த்தினேன்.

பலருக்கும் அவர் நம்மவர்;
எனக்கு நல்லவர். வாழ்க!

இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X