வளருங்கள் தம்பிகளே … யுவன், உதயநிதியை பாராட்டும் வைரமுத்து
சென்னை: உதயநிதியின் கண்ணே கலைமானே படம் பார்த்ததாக கவிஞர் வைரமுத்து ட்வீட் செய்துள்ளார்.
இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி, ஷாஜி ஷென் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் கண்ணே கலைமானே. இப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் வைரமுத்து பாடல்களை எழுதியிருக்கிறார். இப்படத்தை பார்த்ததாக ட்வீட் செய்துள்ள வைரமுத்து, உதயநிதி மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவை பாராட்டியுள்ளார்.
"சீனுராமசாமி உதயநிதியை உன்னத நடிகராக உயர்த்தியிருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசைக்கோலம் எழுதியிருக்கிறார். வளருங்கள் தம்பிகளே வாழ்த்துக்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரசிகர்களின் பார்வைக்காக ஒரு காதல் பாடல் என்று, அப்படத்திற்காக அவர் எழுதியுள்ள பாடல் வரிகளையும் பகிர்ந்திருக்கிறார்.
"எந்தன் கண்களைக் காணோம்
அவள் கண்களில் கண்களைத்
தொலைத்தேனா?
நேரில் வந்தாள் - ஏன் என்
நெஞ்சில் வந்தாள்? - உயிர்க்
கூட்டுக்குள் புகுந்து
பூட்டிக் கொண்டாள்
எவ்வாறு மறப்பது - உயிர்
மரிப்பது நன்று
*
காதல் என்றால்
கெட்ட வார்த்தை என்றால் - இந்தக்
கலகப் பூச்சிகள் பிறப்பது ஏது?
சாதி கண்டே
காதல் தோன்றும் என்றால் - பட்சி
விலங்கு ஜாதிக்கு ஜாதகம் ஏது?
கல்யாணம் தானே
காதலின் எதிரியென்றால்
கல்யாணம் தேவையா?
என்பதுதான் அந்த பாடல் வரிகள்.


Click it and Unblock the Notifications











