twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஏம்மா கொஞ்சம் தள்ளி நில்லுமா எனக்கு பயமா இருக்கு - அரங்கை அதிர வைத்த வைரமுத்து

    |

    Recommended Video

    ரஜினியின் ஒவ்வொரு நிமிடமும் தங்கச்சொட்டு என்பது தமிழ்நாடு அறியும் | Vairamuthu

    சென்னை: கதாசிரியர் கலைஞானத்திற்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய கவிஞர் வைரமுத்து, நிகழ்ச்சி தொகுப்பாளினியைப் பார்த்து ஏம்மா கொஞ்சம் தள்ளி நில்லம்மா என்று சொன்னதைப் பார்த்து பார்வையாளர்கள் கூட்டத்தில் கரகோசம் எழுந்தது.

    கவிஞர் கண்ணதாசனுக்கு ஏற்பட்ட பல பிரச்சனைகளை நாம் படித்திருக்கிறோம் பார்த்திறோம். அது போல், இந்த நவீன யுகத்தில் கடந்த ஆண்டு மீ டு விவகாரத்தில் சிக்கி சின்னாபின்னமானார் கவிஞர் வைரமுத்து. குறிப்பாக பாடகி சின்மயி,, வைரமுத்து தன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார் என்று டுவிட்டரில் பற்ற வைத்தார்.

    Vairamuthu speech in Kalaignanam appreciation ceremony

    இதைத் தொடர்ந்து திரையுலகத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் வைரமுத்து மீது வரிசை கட்டி பாலியல் புகார் தெரிவித்தனர். அத்தனை புகார்களையும் தைரியமாக மேற்கொண்டார் வைரமுத்து. பாடகி சின்மயி தொடர்நது பல மாதங்கள் அவரை விடாமல் துரத்தி துரத்தி பாலியல் புகார் தெரிவித்ததோடு முடிந்த அளவு கவிஞர் வைரமுத்துவின் பேரை டேமேஞ் செய்தார்.

    வைரமுத்துவை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்றும் புகார் எழுந்தது. அந்த நேரத்தில் இயக்குநர் பாராதிராஜா மட்டுமே வைரமுத்துவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். இது தொடர்பாக திரையுலகில் ஒரு இறுக்கம் நிலவியது.

    எந்த மாதிரியான வீடியோக்கள் போட்டால் வீயூஸ் அள்ளும்? நடிகை விசித்ரா சொல்லும் நச் பதில்! எந்த மாதிரியான வீடியோக்கள் போட்டால் வீயூஸ் அள்ளும்? நடிகை விசித்ரா சொல்லும் நச் பதில்!

    இது ஒரு புறம் இருக்க நடிகர் மாரிமுத்து, வைரமுத்து ஒரு ஆண் மகன் தானே, பெரிதாக என்ன தப்பு செய்து விட்டார், என்று வைரமுத்துவுக்கு ஆதரவாக பேசி அவரும் சில சிக்கல்களை சந்தித்தார். இதையடுத்து கவிஞர் வைரமுத்து பல மாதங்கள் பொது வெளியில் தலை காட்டாமல் இருந்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த வாரம் சென்னையில் கதாசிரியர், தயாரிப்பாளர் கலைஞானத்துக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதனை இயக்குநர் பாராதிராஜா ஏற்பாடு செய்திருந்தார். நடிகர் ரஜினிகாந்த் இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அந்த விழாவில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது எம்ஜிஆர், சிவாஜி போன்றோருக்கு பாராட்டு விழா எடுத்த பாரதிராஜாவுக்கும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும் பாராட்டு விழா நடத்த வேண்டும் என தெரிவித்தார். அவர் பேசிக் கொண்டிருந்தபோது அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பெண் தொகுப்பாளர் டோஷிலா, வைரமுத்துவின் அருகில் நின்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்து கொஞ்சம் தள்ளி நில்லுமா, எனக்கு அச்சமாக இருக்கு என கூறினார். உடனடியாக அந்தப் பெண் சற்று நகர்ந்து நின்று கொண்டார்.

    அவர் சொன்னதின் அர்த்தம், அவர் பக்கத்தில் வந்தால் சீக்கிரம் பேச்சை முடிக்க சொல்லுவது போல் அடிக்கடி மனதில் தோன்றும், அதனால் சொல்லி இருக்கலாம். அனால் பார்த்தவர்கள் வேறு மாதிரியாகவும் கற்பனையும் செய்ய தொடங்கினர். அப்போது அந்த அரங்கமே கைதட்டலில் அதிர்ந்தது. ஆனாலும் பெண் நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் அவர் சொன்ன விதம் தவறு என்று பலரும் தெரிவித்தனர்.

    இதை சின்மயி பார்த்தாரா, பெண்ணுரிமை, பெண் சுதந்திரம் என்று பேசுபவர்கள் பார்த்தார்களா, இது ஒரு பிரச்சனையாக வெடிக்குமா, என்றெல்லாம் யாருக்கும் தெரியாது. ஆனால், வைரமுத்து பெண்களிடம் மிக மிக ஜாக்கிரதையாக இப்போது நடந்து கொள்கிறார் என்பது மட்டும் உண்மை.

    English summary
    Speaking at a appreciation ceremony for Kalaignanam, the poet Vairamuthu warned the host that the audience was imagined differently and the crowd was upset.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X