இசை பெரியதா?.. பாடல் வரிகள் பெரியதா?.. இளையராஜாவுக்கு ’நோஸ் கட்’ கொடுத்த வைரமுத்து.. என்ன ஆச்சு?

சென்னை: பிரஜின், யாஷிகா ஆனந்த் நடித்துள்ள 'படிக்காத பக்கங்கள்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட வைரமுத்து இசை பெரியதா?.. பாடல் வரிகள் பெரியதா? ஒரு நல்ல பாடலுக்கு எது முக்கியம் என பேசியிருப்பது இளையராஜாவுக்கு வைரமுத்து கொடுத்த பதிலடியாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் கிளம்பி உள்ளன.

பல ஆயிரக் கணக்கான பாடல்களை இசையமைத்து இசைஞானியாக தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து உச்சத்தில் இருக்கும் இளையராஜா மீது பலருக்கும் உள்ள வருத்தம் என்றால் பாடல்களுக்கு அவர் காப்புரிமை கோருவது தான் எனக் கூறுகின்றனர்.

Vairamuthu talks about Music and Lyrics issue and indirectly attack Ilaiyaraaja

தனது இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் தனக்கு மட்டுமே சொந்தம் என இளையராஜா சொல்லி வரும் நிலையில், இசையும் பாடல் வரிகளும், பாடகர்களின் குரலும் இணைந்தால் தான் ஒரு நல்ல பாடல் உருவாகும் என வைரமுத்து பேசியுள்ளார்.

சரக்கு பாடல்: யாஷிகா ஆனந்த், பிரஜின் நடிப்பில் உருவாகி உள்ள படிக்காத பக்கங்கள் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய வைரமுத்து, அந்த படத்தில் தான் ஒரு சரக்குக்கு எதிரான பாடலை எழுதியிருப்பதாக கூறினார்.

"மரணத்திற்கு முன்பே
மனிதனைப் புதைத்துவிடுகிறது
மது

ஒவ்வொரு மணி நேரத்திற்கும்
16 மதுச் சாவுகள் நிகழ்கின்றன

44 முதல் 67 விழுக்காடு
சாலை விபத்துகள்
மதுவால் நேர்கின்றன

20மில்லி ரத்தத்தில் கலந்தாலே
பார்வையைப் பாதிக்கிறது மது

30மில்லி கலந்தால்
தசை தன் கட்டுப்பாட்டை
இழந்துவிடுகிறது

ஒருநாட்டின் மனிதவளம்
தவணைமுறையில் சாகிறது

ஒழுக்கக்கோடுகள் அழிந்து
ஒழுக்கக்கேடுகள் நுழைகின்றன வாழ்வியலில்

மதுவுக்கு எதிராக
நான் எழுதிய ஒருபாடலை
இன்று மாலை வெளியிடுகிறோம்

இப்போதே உங்கள்
கண்களுக்கும் காதுகளுக்கும்" என அதுதொடர்பாக ஒரு ட்வீட்டையும் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

அஞ்ஞானி: இசை பெரியதா? பாடல் வரிகள் பெரியதா? என்கிற பிரச்சனை தற்போது சினிமாவில் எழுந்துள்ளது. இசையும் பாடல் வரிகளும் இணைந்திருந்தால் நல்ல பாடல் உருவாகும் என்றும் ஒருவரை பெயரை வைத்து தான் பிரேமா என்றோ சங்கர் என்றோ அழைக்கிறோம். பெயரே இல்லை என்றால் எப்படி அழைப்போம். வெறும் இசை மட்டுமே இருந்திருந்தால் அந்த பாடலை அடையாளம் காண முடியுமோ? என்றார்.

பல கவிஞர்கள்: காலம் கடந்தும் பாடல்கள் நிற்பதற்கு காரணம் இசை மட்டும் தானா? கண்ணதாசனின் வரிகளில் உருவான பாடல்களை எந்தவொரு இசையும் இல்லாமல் பாட முடியாதா? பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார், மருதகாசி, உடுமலைப்பேட்டை நாராயண கவி, ஆலங்குடி சோமு உள்ளிட்ட பல கவிஞர்கள் தமிழ் சினிமாவுக்கு கருத்துள்ள பாடல் வரிகளை கொடுத்து காலம் கடந்தும் நிற்கின்றனர் எனக் கூறினார். இசையும் கவிதையும் சேர்ந்தால் தான் பாடல். அது இல்லை என்று சொல்பவர் அஞ்ஞானி என்றே வைரமுத்து பேசியது பரபரப்பை கிளப்பி உள்ளது.

இளையராஜாவுக்கு எதிராக: இளையராஜாவின் பயோபிக் படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். குபேரன் படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் தனுஷ் விரைவில் இளையராஜா பயோபிக் படத்தில் இணையவுள்ளார். இந்நிலையில், இளையராஜாவின் கருத்துக்கு எதிராக தரமான பதிலடியை வைரமுத்து கொடுத்துள்ளார் என ரசிகர்கள் அவரது வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X