திரைப்படமாகிறது வைரமுத்துவின் தண்ணீர்தேசம்!

ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்து பல லட்சக்கணக்கான வாசகர்களின் பாராட்டுகளைப் பெற்றது இந்த நாவல்.
1996 இல் புத்தகமாக வெளியிடப்பட்டு இன்று வரை 18 பதிப்புகள் கண்டு விற்பனையிலும் சாதனை படைத்திருக்கிறது. கடற்பரப்பில் பல சாகசங்களுக்கிடையே நடக்கும் காதல் கதையினைச் சொல்லும் தண்ணீர் தேசம் அந்தத் தலைப்பிலேயே திரைப்படமாக்கப்படுகிறது.
ரெட் எர்த் மூவிஸ் புரொடக்ஷன்ஸ் என்கிற மலேசிய நிறுவனத்தின் சார்பில் நிவாஸ் ராகவன் -யுவராஜ் செளமா ஆகியோர் தண்ணீர் தேசத்தைத் தயாரிக்கிறார்கள். நாவலை எழுதிய வைரமுத்துவே படத்திற்கு கதை- வசனம் மற்றும் பாடல்களையும் எழுதுகிறார்.
இந்தப் படத்தை ஷிவன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே வேறு மொழிகளில் சில வெற்றிப் படங்களை இயக்கியவர். தமிழில் இது இவருக்கு முதலாவது படம். இந்தப் படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவிடம் இணை ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்த வி.தியாகராஜன் ஒளிப்பதிவு செய்கிறார்.
எங்கேயும் எப்போதும் இசையமைப்பாளர் சத்யா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். தூத்துக்குடி, அந்தமான் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஜனவரி 2013ல் முற்றிலும் புதுமுகங்களோடு தொடங்கவிருக்கும் தண்ணீர் தேசம் படத்திற்கு கதாநாயகன், கதாநாயகி தேர்வு நடக்கிறது.


Click it and Unblock the Notifications











