twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சமூக பிரச்சனைக்கு குரல்.. ட்விட்டருக்கு மீண்டும் திரும்பிய வைரமுத்து: ராமதாஸுக்கு ஆதரவு

    |

    சென்னை: மீடூ பிரச்சனைக்குப் பிறகு முதன்முறையாக வைரமுத்து ட்வீட் செய்துள்ளார்.

    கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி சமீபத்தில் பாலியல் புகார் கூறினார். அதனைத் தொடர்ந்து சில பெண்களும் புகார் கூற மீடூ விவகாரம் சூடு பிடித்தது.

    Vairamuthu tweet after Metoo allegations

    சட்ட ரீதியாக மீடூ பிரச்சனையை அணுகத் தயாராக உள்ளதாக வீடியோ வெளியிட்டார் வைரமுத்து. அதன் பிறகு அவர் எதுவும் ட்வீட் செய்யவில்லை.

    தற்போது பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் அறிக்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார்.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு சில பாடங்களுக்கான வினாத்தாள்களை தமிழில் தயாரிக்க முடியாது என தேர்வாணைய செயலர் நந்தகுமார் விளக்கமளித்ததற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்திருந்தார்.

    ராமதாஸுக்கு ஆதரவளிக்கும் வகையில், " அதிகார மையங்களில் நிலவும் மொழிதான் ஓர் இனத்தில் நிலைபெறும். தேர்வாணையத்தின் வினாத்தாள்கள் கட்டாயம் தமிழிலும் தயாரிக்கப்பட வேண்டும். இந்தக்கருத்தில் மருத்துவர் ராமதாஸ் அவர்களை நான் வழிமொழிகிறேன். விருதுபெற்ற மொழிபெயர்ப்பாளர்களுக்கு நல்லூதியம் வழங்கி நல்ல மொழிபெயர்ப்பைப் பெறலாம்." என வைரமுத்து ட்வீட் செய்துள்ளார்.

    English summary
    Vairamuthu is back to twitter to rise his voice against social issues after Metoo allegations. He has come forward to support PMK leader Ramadoss statement against Tamilnadu public service commission examinations.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X