Don't Miss!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சமூக பிரச்சனைக்கு குரல்.. ட்விட்டருக்கு மீண்டும் திரும்பிய வைரமுத்து: ராமதாஸுக்கு ஆதரவு
சென்னை: மீடூ பிரச்சனைக்குப் பிறகு முதன்முறையாக வைரமுத்து ட்வீட் செய்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி சமீபத்தில் பாலியல் புகார் கூறினார். அதனைத் தொடர்ந்து சில பெண்களும் புகார் கூற மீடூ விவகாரம் சூடு பிடித்தது.
சட்ட ரீதியாக மீடூ பிரச்சனையை அணுகத் தயாராக உள்ளதாக வீடியோ வெளியிட்டார் வைரமுத்து. அதன் பிறகு அவர் எதுவும் ட்வீட் செய்யவில்லை.
தற்போது பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் அறிக்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு சில பாடங்களுக்கான வினாத்தாள்களை தமிழில் தயாரிக்க முடியாது என தேர்வாணைய செயலர் நந்தகுமார் விளக்கமளித்ததற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்திருந்தார்.
அதிகார மையங்களில் நிலவும் மொழிதான் ஓர் இனத்தில் நிலைபெறும். தேர்வாணையத்தின் வினாத்தாள்கள் கட்டாயம் தமிழிலும் தயாரிக்கப்பட வேண்டும். இந்தக்கருத்தில் மருத்துவர் ராமதாஸ் அவர்களை நான் வழிமொழிகிறேன். விருதுபெற்ற மொழிபெயர்ப்பாளர்களுக்கு நல்லூதியம் வழங்கி நல்ல மொழிபெயர்ப்பைப் பெறலாம்.
— வைரமுத்து (@vairamuthu) November 5, 2018
ராமதாஸுக்கு ஆதரவளிக்கும் வகையில், " அதிகார மையங்களில் நிலவும் மொழிதான் ஓர் இனத்தில் நிலைபெறும். தேர்வாணையத்தின் வினாத்தாள்கள் கட்டாயம் தமிழிலும் தயாரிக்கப்பட வேண்டும். இந்தக்கருத்தில் மருத்துவர் ராமதாஸ் அவர்களை நான் வழிமொழிகிறேன். விருதுபெற்ற மொழிபெயர்ப்பாளர்களுக்கு நல்லூதியம் வழங்கி நல்ல மொழிபெயர்ப்பைப் பெறலாம்." என வைரமுத்து ட்வீட் செய்துள்ளார்.