'7 டைம்ஸ்': வைரமுத்துவுக்கு தேசிய விருதுகள் வாங்கிக் கொடுத்த பாடல்கள் எவையெவை?

By Siva

சென்னை: தர்மதுரை படத்திற்காக கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு சிறந்த பாடல் ஆசிரியருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

64வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த தமிழ் படத்திற்கான விருது ராஜு முருகன் இயக்கிய ஜோக்கர் படத்திற்கு கிடைத்துள்ளது.

சிறந்த பாடல் ஆசிரியருக்கான விருது கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு கிடைத்துள்ளது.

எந்தப் பக்கம்

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்த தர்மதுரை படத்தில் வரும் எந்தப் பக்கம் பாடலுக்காக வைரமுத்துவுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

முதல் மரியாதை

சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான முதல் மரியாதை படத்தின் அனைத்து பாடல்களுக்காக வைரமுத்துவுக்கு முதல் முறையாக சிறந்த பாடல் ஆசிரியருக்கான தேசிய விருது கிடைத்தது. அந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களுமே அருமை என்றாலும் பூங்காற்று திரும்புமா பாடல் பலருக்கும் பிடித்த பாடல்.

ரோஜா

ரோஜா படத்தில் வந்த சின்ன சின்ன ஆசை பாடலுக்காக வைரமுத்துவுக்கு தேசிய விருது கிடைத்தது. அந்த பாடல் ஒரு காலத்தில் பட்டிதொட்டி எல்லாம் பிரபலம்.

கருத்தம்மா

கருத்தம்மா படத்தில் வந்த போறாளே பொன்னுத்தாயி பாடலுக்காகவும் வைரமுத்துவுக்கு தேசிய விருது கிடைத்தது.

பவித்ரா

வைரமுத்துவுக்கு தேசிய விருது வாங்கிக் கொடுத்த பாடல்களில் அஜீத்தின் பவித்ரா படத்தில் வந்த உயிரும் நீயே பாடலும் ஒன்று.

சங்கமம்

சங்கமம் படத்தில் வந்த முதல் முறை கிள்ளிப் பார்த்தேன் பாடலும் வைரமுத்துவுக்கு தேசிய விருது வாங்கிக் கொடுத்த பாடல்.

கன்னத்தில் முத்தமிட்டால்

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வந்த அனைத்து பாடல்களுக்காகவும் வைரமுத்துவுக்கு தேசிய விருது கிடைத்தது.

தென்மேற்கு பருவக்காற்று

தென்மேற்கு பருவக்காற்று படத்தில் வந்த கள்ளிக்காட்டில் பிறந்த தாயே பாடலுக்காகவும் வைரமுத்துவுக்கு தேசிய விருது கிடைத்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X