நீ நிரந்தரமானவன்.. எந்த நிலையிலும் உனக்கு மரணமில்லை.. கண்ணதாசன் பிறந்தநாள்.. வைரமுத்து வாழ்த்து!
சென்னை: கவியரசு கண்ணதாசன் பிறந்த நாளை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து டிவிட்டரில் வாழ்த்து கவிதை பதிவிட்டுள்ளார்.
கவிஞர், பாடலாசிரியர், நடிகர், வசனகர்த்தா, எடிட்டர் என பல முகங்களை கொண்டவர் கவிஞர் கண்ணதாசன். 1927ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி பிறந்தார்.
தமிழ் சினிமாவில் 5000க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களை எழுதியுள்ளார். 6000க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளார். 232 புத்தகங்களையும் எழுதி வெளியிட்டுள்ளார் கவியரசு கண்ணதாசன்.

சாகித்திய அகாடமி விருது பெற்றுள்ள கவியரசு கண்ணதாசன், 1969ஆம் ஆண்டு வெளியான குழந்தைக்காக படத்திற்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதையும் பெற்றார் கண்ணதாசன்.
இன்று கண்ணதாசனின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்துவும் கண்ணதாசனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது,
உன் பிறந்தநாளில்
காதலன் வணங்குகிறேன்
கவியரசே!
பாட்டு மொழிக்கு
உயரமும் ஒய்யாரமும் தந்தவனே!
உன் வரிகளில்
வாழ்கிறாய் நீ
உன் வரிகளோடு
வாழ்கிறோம் நாங்கள்
நீ நிரந்தரமானவன்
அழிவதில்லை - எந்த
நிலையிலும் உனக்கு
மரணமில்லை..
இவ்வாறு கவிஞர் வைரமுத்து மறைந்த கவிஞர் கவியரசு கண்ணதாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











