twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமல் பற்றி அன்றே சொன்ன கவிஞர் வைரமுத்து: அவர் சொன்னதில் உண்மை இருக்கு

    |

    சென்னை: நடிகர் கமல்ஹாசன் இன்று 64வது அகவையை எட்டுகிறார். கமல்ஹாசன் சிறந்த கவிஞர் என பலரும் பாராட்டியுள்ளனர்.

    ரசிகர்களின் ரசனையறிந்து, அவர்களுக்கு தேவையான படைப்புகளைக் கொடுப்பவன் கலைஞன். அந்த ரசிகர்களின் ரசனையை இருக்கும் நிலையிலிருந்து மேலுயர்த்தி அதனூடே தன் கலைப்படைப்பை வழங்க துடிப்பவன் புதுமைக் கலைஞன். அவ்வகையில் கமல் புதுமை படைக்க நினைக்கும் புதுமைக் கலைஞன். சமகாலத்தில் அது நிலைபெறாமல் போனாலும் காலமாற்றத்தின் சுழற்சியில் பேசப்படும் என்பது தின்னம். கமலின் அற்புதப் படைப்புகள் அவ்வாறே வழிமொழியப்படுகின்றன. அன்பு தான் கடவுள் என ஆழமாகச் சொன்ன அன்பே சிவம் திரைப்படம் காலம் கடந்து கொண்டாடப்படுவதே அதற்கான சிறந்த உதாரணங்களில் ஒன்று.

    சிறந்த நடிகர், சிறந்த நடனக் கலைஞர், சிறந்த இயக்குனர் என்று சொல்லிக் கொண்டே போகலாம். இவற்றை விட அவர் மிகச் சிறந்த கவிஞர் என்பது கமலின் தனிச்சிறப்பு.

    மழைக்குமிடில்

    மழைக்குமிடில்

    ஒவ்வொரு கவிஞனிடமும், தன்னை பாதித்த கவிஞர்களின் பாதிப்பு இருக்கும். ஆனால் கமலின் கவிதையில் அந்த பாதிப்பு இல்லை. இது மிக ஆச்சரியமான விஷயம் என கவிஞர் வைரமுத்து கமல் கவிதைப் பற்றி குறிப்பிடுகிறார். மேலும், ஒரு கவிதையில் "மழைக்குமிடில்" என்ற வார்த்தையை கமல் பயன்படுத்தியதைப் பார்த்து வியந்து வினவியதாகவும் அதற்கு கமல் கீழ்க்கண்டவாறு பதிலளித்ததாகவும் சொல்கிறார்.

    கிளை கிளைக்குமிடில்

    கிளை கிளைக்குமிடில்

    மழை மழைக்குமிடில் என்று ஏன் ஆகாது எனக் கேட்டாராம் கமல்.

    வெண்பா

    வெண்பா

    வெண்பாவிலியே பாட்டெழுதக்கூடிய வல்லமை படைத்தவர் கமல்ஹாசன் என்று, அவரின் நெருங்கிய நண்பர் ஞானசம்பந்தன் கூறுகிறார்.

    ஈற்றடி முச்சீர் ஏனையடிகள் நாற்சீர் மாமுன்னறியும் விளமுன்நேரும் கொண்டு வேற்றுத்தளை விலகாமல் வருவதுதான் வெண்பாவின் இலக்கணம்.

    இந்த இலக்கணச் சிக்கலினால் கம்பன் கூட விருத்தப்பா-வில் தான் ராமாயணம் எழுதினார். ஆனால் கமலிடம் சொன்னால் வெண்பாவிலேயே பாட்டெழுதுவார் என்கிறார்.

    பாராட்டு

    பாராட்டு

    தன்னிடம் கமல் வேலை வாங்கும் திறனை எப்போதும் மெச்சிக்கொள்ளும் வாலி, விரல் இல்லாமல் வீணை வாசிக்க வந்தவரல்ல கமல். எல்லாவற்றையும் பயின்று தேறிதான் இன்று உலகமகா கவிஞராக கலைஞராக விளங்குகிறார் என்றார்.

    இப்படி பல ஆளுமைகள் போற்றும் கமலின் கவித்துவத்தை உணர்த்தும் சில ஹைக்கூக்கள் இதோ..

    அனாதைகள் கடவுளின்

    குழந்தைகள் என்றால்

    அந்த கடவுளுக்கும்

    அவசியம் வேண்டும்

    குடும்பக்கட்டுப்பாடு!

    ஆசையால் பிறந்த குழந்தைக்கு அனாதை என பெயர்சூட்டி தப்பிக்க கடவுளின் பெயரை பயன்படுத்தும் சமூகத்தை சாடுகிறார்.

    பொய்

    நச்சு

    நாகத்தின் நச்சதனைத்

    தூற்றுவார் தூற்றிடினும்

    நச்சதற்கு கேடயம்போல்

    தற்காப்பு ஆயுதமே

    பறவைக்கு அலகினைப்போல்

    பசுமாட்டுக்குக் கொம்பைப்போல்

    நமக்கெல்லாம் பொய்யைப்போல்

    தப்பிக்கும் ஓர்வழிதான்

    நாகத்தின் நச்சென்பேன்.

    என மனிதனின் பொய் எனும் ஆயுதத்திற்கு காரணம் தேடுகிறார். அதே நேரத்தில் நாகத்தின் நச்சை உவமைப் படுத்துவதன்மூலம் பொய் எப்படிப்பட்ட விளைவுகளைக் கொடுக்கக் கூடியது என்பதை விளக்குகிறார்.

    பெருஞ்சிங்கம்

    திறமை

    ஞானமெனும் பெருஞ்சிங்கம்

    எறும்புகளை உண்பதில்லை

    இறந்தபின் சிங்கத்தை

    எறும்புகள் உண்பதுண்டு.

    என்று பெருஞ்சிங்கம் எனும் கவிதையில் மகா கலைஞனின் பண்புகளையும் திறமைகளையும் போற்றுகிறார்.

    கமல்ஹாசன் மிகச்சிறந்த கவிஞராக போற்றப்பட இப்படி எத்தனையோ கவிதைகள் இருக்கின்றன. கவிஞர் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    English summary
    Actor Kamal is turning 64 today. He has a unique style in writing poem. His unique style of writing noticed by legendary poets Vairamuthu and Vaali.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X