ஊர்ஒலகம் காத்திருக்கு உறவாட வாமகனே.. ஒரேஒரு மன்றாட்டு உசுரோட வாமகனே.. கலங்க வைக்கும் வைரமுத்து!
Recommended Video
சென்னை: ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருக்கும் குழந்தை சுஜித்துக்காக கலங்க வைக்கும் கவிதையை வடித்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து.
திருச்சி அருகே அழ்துளை கிணற்றில் சிக்கிய 2 வயது குழந்தை சுஜித்தை மீட்க நவீன எந்திரங்களின் உதவியுடன் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நான்கு நாட்களாகியும் குழந்தை மீட்கப்படாததால் ஒட்டு மொத்த தமிழகமும் சோகத்தில் மூழ்கியிருக்கிறது.
குழந்தையை மீட்கும் ஒவ்வொரு முயற்சியும் பின்னடைவை சந்தித்து வருகிறது. குழந்தையை இன்றுக்குள் மீட்டுவிட மாட்டார்களா என தமிழ்நாடே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது.
உருக்கமான கவிதை உருக்கமான கவிதை
குழந்தை நல்லபடியாக மீட்கப்பட வேண்டும் என அனைத்து வழிபாட்டு தலங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குழந்தை சுஜித் குறித்து கவிஞர் வைரமுத்து மீண்டும் ஒரு உருக்கமான கவிதையை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
சோளக்கொல்லையிலே
சொல்லாமப் போனவனே..
அந்த கவிதையாவது,
சோளக் கொல்லையில
சொல்லாமப் போனவனே
மீளவழி இல்லாம
நீளவழி போனவனே
கருக்குழியிலிருந்து
கண்தொறந்து வந்ததுபோல்
எருக்குழியிலிருந்து
எந்திரிச்சு வந்திரப்பா
ஊர்ஒலகம் காத்திருக்கு
உறவாட வாமகனே
ஒரேஒரு மன்றாட்டு
உசுரோட வாமகனே
ஆழ்துளை எந்திரத்தையோ
குழந்தை சுஜித்துக்காக நேற்று முதல் தனது கவிதைகள் வாயிலாக நம்பிக்கையை ஊட்டி வருகிறார் வைரமுத்து. அந்த வகையில் காலையில் அவர் பதிவிட்ட கவிதை,
அரசு எந்திரத்தையோ
ஆழ்துளை எந்திரத்தையோ
குறை சொல்லும் நேரமில்லை;
குழந்தை மீட்பே குறிக்கோள்.
பாறை என்பது நல்வாய்ப்பு; மண்சரியாது.
தடைக்கல்லைப் படிக்கல்லாக்கி முன்னேறுவோம்.
கண்ணீரோடு கைதட்டுகிறேன்
நேற்று தீயணைப்பு வீரர்கள் குழிக்குள் இறங்கி குழந்தையை காப்பாற்ற தயாரான செய்தியை அறிந்த வைரமுத்து அவர்களை வாழ்த்தியும் ஊக்கப்படுத்தியும் கவிதை பதிவிட்டிருந்தார். அந்த கவிதையாவது,
குழாயில் வீழ்ந்த குழந்தையை மீட்க நிலமிறங்கும் வீரர்களை வாழ்த்திக் கண்ணீரோடு கைதட்டுகிறேன்.

உருக்கமான கவிதை
குழந்தை நல்லபடியாக மீட்கப்பட வேண்டும் என அனைத்து வழிபாட்டு தலங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குழந்தை சுஜித் குறித்து கவிஞர் வைரமுத்து மீண்டும் ஒரு உருக்கமான கவிதையை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











