வடிவேலு இருந்தது போல வேலையில்லாமல் நான் வீட்ல இருந்தது இல்லை.. வெளிப்படையாய் பேசிய வையாபுரி!
சென்னை: 55 வயதாகும் வையாபுரி இதுவரை 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். நடிகர் விஜய்யுடன் லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், திருப்பாச்சி, சிவகாசி, வில்லு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள வையாபுரி கடந்த ஆண்டு வெளியான லியோ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் சினிமாவில் அனைவருடனும் அன்பாகவும் பாசமாகவும் பழகுவது எப்படி என்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்தது எப்படி என்பது குறித்தும் பேசியுள்ளார்.

முன்னணி காமெடி நடிகனாக வரமுடியவில்லை என்றாலும் தொடர்ந்து பல படங்களில் நடித்துக் கொண்டே இருப்பதே தனக்கு சந்தோஷத்தை கொடுத்து வருவதாக கூறியுள்ளார்.
400 படங்கள்: 1993ம் ஆண்டு சத்யராஜ் நடித்து வெளியான உடன்பிறப்பு படத்தின் மூலம் அறிமுகமானார் வையாபுரி. கருத்தம்மா, அவ்வை சண்முகி, ராசி, உல்லாசம், மறுமலர்ச்சி, காதலா காதலா, சொல்லாமலே, கண்ணெதிரே தோன்றினாள், சூர்யவம்சம், அமர்க்களம், பிரியமானவளே, தில், மஜ்னு, விருமன், தலைக்கூத்தல், கிக், லைசன்ஸ், வா வரலாம் வா, லோக்கல் சரக்கு உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார் வையாபுரி.
லியோவில் வில்லன்: அவ்வை சண்முகி படத்தில் இருந்து கமல்ஹாசனின் பல படங்களில் நடித்துள்ளார் வையாபுரி. விக்ரம் படத்தில் வையாபுரி நடிக்க வேண்டியது. ஆனால், அந்த படத்தில் அவருக்கான கதாபாத்திரம் பெரிதாக இல்லை என லோகேஷ் கனகராஜ் சொன்ன நிலையில், லியோ படத்தில் முக்கியமான நெகட்டிவ் ரோலில் நடிக்க வைத்திருந்தார். அந்த கதாபாத்திரத்தை என்னை நம்பி கொடுத்ததற்கு ரொம்பவே சந்தோஷப்பட்டேன். படத்தில் நடிக்கும் போது எல்லாம் என்னுடைய ரோலுக்கு எந்தளவு முக்கியத்துவம் இருக்கும் என நிஜமாவே தெரியல. ஆனால், படம் ரிலீஸ் ஆன பிறகு இவன் தான்டா மெயின் வில்லன் என பலரும் மீம் போடும் போது தான் புரிந்துக் கொண்டேன் என்றார்.

வடிவேலுவுக்கு நடந்ததை போல: வடிவேலு, விவேக், தாமு, மயில்சாமி என பலருடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்துள்ளேன். ஒரு வருடத்தில் 18 படமெல்லாம் நடித்திருக்கிறேன். பெரிய அளவு வளரவில்லை என்கிற ஏக்கமும் இல்லை. அதே நேரத்தில் வடிவேலுவுக்கு நடந்ததை போல வீட்டில் சில காலம் முடங்கியும் இருக்கவில்லை என அந்த பேட்டியில் பேசியுள்ளார்.
2 கார் இருக்கு: ஆரம்பத்தில் மாருதி 800 கார் ஒன்று வாங்கினேன். அதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்து பசங்க எல்லாம் பெருசா ஆகிட்டாங்கன்னு இன்னொரு கார் வாங்கினேன். அதிகமான ஆடம்பர செலவு எல்லாம் செய்வதில்லை. கிடைக்கிற படங்களில் எல்லாம் நடித்துக் கொண்டிருக்கிறேன். அட்லீ, நெல்சன் உள்ளிட்ட இயக்குநர்கள் படங்களில் நடிக்க ரொம்ப ஆசையா இருக்கு என பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











