twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தி அன்டோல்ட் வாஜ்பாய் - சினிமாவாகும் வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு

    |

    மும்பை: தி அன்டோல்டு வாஜ்பாய் என்னும் புத்தகத்தை அடிப்படையாக வைத்து மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க முன்வந்துள்ளனர். இதற்கான உரிமையை அமாஷ் ஃபிலிம்ஸ் உரிமையாளர்களான சிவன் ஷர்மா மற்றும் ஜீவன் அஹ்மத் வாங்கியுள்ளனர்.

    அரசியல், விளையாட்டு துறையில் உள்ளவர்களின் வாழ்க்கை வரலாற்றினை சினிமாவாக எடுப்பது பிரபலமாகி வருகிறது. அந்தவகையில் இப்போது முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு சினிமாவாகிறது.

    Vajpayees biopic is being made into a movie

    முன்னாள் பிரதமர் மற்றும் பாஜகவின் மூத்த தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் நம் நாட்டை பல கோணங்களில் முன்னேற்ற பாதையில் வழிநடத்திய தலைவர். நாட்டின் சாலைப் போக்குவரத்துக்கு துறை மற்றும் தொழில் நுட்ப துறையில் பல வளர்ச்சியை கொண்டு வந்தவர் வாஜ்பாய்.
    திருமணம் கூட செய்து கொள்ளாமல் அவருடைய வாழ்கை முழுவதையும் இந்திய தேசத்திற்காகவே அர்ப்பணித்த மகானுக்கு பாரத ரத்னா விருது 2015ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. நீண்ட நாட்கள் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த 2018 ஆகஸ்ட் 16ஆம் தேதியன்று காலமானார்.

    வாஜ்பாயின் வாழ்கை வரலாற்றை தி அன்டோல்ட் வாஜ்பாய் எனும் புத்தகமாக எழுதினார் உல்லேக் என்.பி. அவரின் சிறுவயது முதல் அரசியல் தலைவராக இருந்த வரை அவரின் செயல் திறன்கள் யாரும் அறியாதவை.

    அந்த மாமேதையின் வாழ்கை வரலாற்றை ஒரு படமாக எடுத்து மக்களுக்கே வழங்க வேண்டும் என எண்ணி அதிகாரப்பூர்வமாக எழுத்தாளரிடம் இருந்த உரிமைகைளை பெற்றுள்ளனர் அமாஷ் பிலிம்ஸ் உரிமையாளர்களான சிவன் ஷர்மா மற்றும் ஜீஷன் அஹ்மத்.

    வாஜ்பாய் அவர்களின் குடும்பம், குழந்தை பருவம், கல்லூரி பருவம் முதல் அவரது அரசியல் பயணம் வரை அனைத்தையும் படமாகவுள்ளனர். இக்கதை குறித்து அவர்கள் கூறுகையில், வாஜ்பாயின் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குதல் என்பது அவர்களது வாழ்க்கை லட்சியத்தில் ஒன்றாகும்.

    தி அன்டோல்ட் வாஜ்பாய் புத்தகத்தை படிக்கும் போது வாஜ்பாய் மீது மிகுந்த மகிழ்ச்சியும் மரியாதையும் உருவாகிறது. அவரின் ஆளுமை பண்புகள், நாம் அறியாத அவரின் குணாதிசயங்கள், அவர் நம் தேசத்திற்காக செய்த பணியும் நம்மை வியப்படைய வைக்கிறது. அந்த வியப்பும் மரியாதையும் நிச்சயம் திரைப்படத்தில் வெளிவரும் என்கிறார்கள் இயக்குனர்கள்.

    வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு குறித்த ஸ்கிரிப்ட்டிங் வேலை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஸ்கிரிப்ட்டிங் முழுமையாக முடிவடைந்த பின்னர் இப்படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர்கள் தேர்ந்தேடுக்கப்படுவார்கள்.

    English summary
    Based on the book The Untold Vajpayee, they have come forward to film the biography of the late Prime Minister Vajpayee. Sivan Sharma and Jeevan Ahmed, owners of Amash Films, have bought the rights.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X