ஒரே சந்தேகம்.. நள்ளிரவில் கதவை தட்டிய ஆர்த்தி.. பிரிவுக்கு காரணமே இதுதானா?
சென்னை: ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். கடந்த சில மாதமாக அவரும் அவரது மனைவியும் விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் வெளிவந்த நிலையில், ஜெயம் ரவி, எக்ஸ் தள பக்கத்தில், ஆர்த்தியுடனான திருமண வாழ்க்கையில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
இந்த செய்தி திரைத்துறையினரை மட்டுமில்லாமல், அவரின் ரசிகர்களையும் அதிர்ச்சியில் அழ்த்தி உள்ளது. இதுகுறித்து வலைப்பேச்சு அந்தணன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ஆர்த்திக்கு ஜெயம் ரவி மீது வந்த சந்தேகம் தான் ஜெயம் ரவி இப்படி ஒரு முடிவை எடுக்க காரணம் என கூறியுள்ளார்.

சந்தேகம்: ஜெயம் ரவியை ஆர்த்தி சந்தேகப்பட்டதால், திடீரென படப்பிடிப்புக்கு வருவது, வெளியூர் படப்பிடிப்பில் இருந்தால், சொல்லாமல் தீடீரென நள்ளிரவில் வந்து கதவை தட்டி, ரூமுக்குள் வேறு யாராவது இருக்கிறார்களா என தேடுவது, என ஆர்த்தி ஜெயம் ரவியை தொடர்ந்து கண்காணிக்க ஆரம்பித்துள்ளார். அந்த சந்தேகத்திற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை. அதுமட்டுமில்லாமல் மேக்கப் மேனுக்கு போன் செய்து அவர் என்ன செய்கிறார் என்று கேட்பது, மேக்கப் மேன் போனை எடுக்கவில்லை என்றால், இயக்குநருக்கு போன் செய்து, ஜெயம் ரவி என்ன செய்கிறார் என்று கேட்டுள்ளார்.
வெறுப்பு வர காரணம்: இது எல்லாம், ஜெயம் ரவியின் காதுக்கு வரும் போது, நாம் என்ன சிறை கைதியா என வேதனைப்பட்டு இருக்கிறார். இது எல்லாம் தான் ஆர்த்தி மீது வெறுப்பு வருவதற்கு காரணம். இருந்தாலும், குழந்தைகள் இருப்பதால், குழந்தைகளுக்காக விட்டுக்கொடுத்து வாழ்ந்துவிடலாம் என முடிந்தவரை ஜெயம் ரவி முயற்சி செய்தும், ஆர்த்தி புரிந்து கொள்ளவில்லை. இவர்கள் பிரியக்கூடாது என இரண்டு குடும்பமும் எவ்வளவு முயற்சி செய்து பேசி பார்த்தும் அது சரி பட்டு வராததால், வேறு வழியில்லாமல் ஜெயம் ரவி இந்த முடிவை எடுத்து இருக்கிறார்.
நடிகையுடன் தொடர்பா?: ஜெயம் ரவி வேறு ஒரு நடிகையை காதலிக்கிறார், அதான் இந்த முடிவை எடுத்தார் என்றால் அப்படி எதுவும் இல்லை. பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த போது நடிகை சோபிதாவை காதலிப்பதாக கிசுகிசு வந்தது. ஆனால், இப்போது அவருக்கு நாகசைத்தன்யாவுடன் நிச்சயம் நடந்து இருப்பதால், அதுவும் பொய்யாகி விட்டது. ஜெயம் ரவி, ஆர்த்தி பிரிவுக்கு முக்கிய காரணமே அடிப்படை ஆதாரம் இல்லாத சந்தேகம் தான்.

குறைவான சம்பளம்: ஜெயம் ரவியின் குடும்பம் சினிமாவில் திறமையானவர்கள் அவர்கள் இயக்கும் படத்தில், ஜெயம் ரவி நடித்த படங்கள் எல்லாம் ஹிட், ஆனால், மாமியார் எடுக்கும் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது. அதற்கு காரணம் ஜெயம் ரவி கதை கேட்பது இல்லை. அதுமட்டுமில்லாமல், ஜெயம் ரவி வெளிப்படத்திற்கு வாங்கும் சம்பளத்தை விட குறைவான சம்பளத்தை கொடுத்துள்ளார்கள். என்னத்தான் மருமகனாக இருந்தாலும் இப்படி குறைவான சம்பளம் கொடுத்தால் எப்படி.
மாமியார் தான் காரணம்: இதைவிட கொடுமை என்னவென்றால், தனி ஒருவன் 2 படத்தை எடுக்க ஜெயம் ரவியால் தேதியை ஒதுக்க முடியவில்லை. ஏன் என்றால் ஜெயம் ரவியின் கால்ஷீட்டையும் அவரின் மாமியார் தான் பார்க்கிறார்கள். நம்மை உருவாக்கிய அண்ணனுக்கு தேதியை கூடஒதுக்க முடியவில்லையே என்கிற வருத்தம் ஜெயம் ரவிக்கு உள்ளது. இப்படி இவையெல்லாம் சேர்ந்துதான், ஜெயம் ரவி இப்படி ஒரு முடிவு எடுக்க காரணமாகிவிட்டது என்று வலைப்பேச்சு அந்தணன் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











