விஜய், த்ரிஷா இடையே என்ன உறவு.. சீக்கிரம் குட் நியூஸ் சொல்லப்போகிறார் விஜய்.. அந்தணன் பகீர்!

சென்னை: தமிழ் சினிமாவில் நல்ல படங்களுக்கும், நல்ல கதைகளுக்குமே கூட பஞ்சம் ஏற்பட்டாலும் ஏற்பட்டுவிடும், இந்த கிசுகிசுக்களுக்கு மட்டும் பஞ்சம் ஏற்படவே ஏற்படாதுபோல. அதேபோல், பல நேரங்களில் கிசுகிசுக்களாக மட்டுமே உலா வரும் தகவல்கள் ஒருநாள் தீடீரென உண்மையாகி வெடித்து விடுகின்றது. அப்படி தற்போது பெரும் கிசுகிசுவைக் கிளப்பியுள்ள விஷயம்தான் விஜய் - த்ரிஷா விவகாரம்.

ஏற்கனவே விஜய் த்ரிஷா குறித்து இணையத்தில் பலவேறு விஷயங்கள் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றது. அதற்கு ஏற்ற வகையில், த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் உடன் லிஃப்ட்டுக்குள் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். இது, இவர்கள் பற்றிய கிசுகிசுக்களை மேலும் அதிகரிக்கச் செய்தது. இப்படியான நிலையில் நேற்று முன் தினம், அதாவது, டிசம்பர் 12ஆம் தேதி, நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்கு விஜய் மற்றும் த்ரிஷா என இருவரும் தனி விமானத்தில் சென்றுள்ளனர்.

valai pechu andhanan vijay thrisha

இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் பரவியது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இது தொடர்பாக பலரும் பலவிதமாக கிசுகிசுக்க ஆரம்பித்தனர். இணையவாசிகள், விஜய்யின் மனைவி சங்கீதாவுக்கு நீதி வேண்டும் என ஹேஸ்டேக் ஒன்றினை எக்ஸ் பக்கத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஒரு ரசிகை ஒருவரோ த்ரிஷாவிடம், நீங்களும் பெண்தானே. தயவு செய்து விஜய்யை விட்டுப் போய்விடுங்கள் எனக் கூறி கமெண்ட் செய்துள்ளார். இது பலரது கவனத்தினைப் பெற்றுள்ளது.

valai pechu andhanan vijay thrisha

விஜய் த்ரிஷா: இப்படியான நிலையில் விஜய்யுடன் த்ரிஷா லிஃப்ட்டில் தனியே இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தது தொடர்பாக வலைபேச்சு அந்தணன் பேசிய வீடியோவையும் இணையவாசிகள் வேகமாக பகிர்ந்து வருகின்றனர். அதில் அவர் பேசியதாவது, " இது தொடர்பாக நாம் மிகவும் உள்ளே போக முடியாது. ஆனால் விஜய்க்கும் த்ரிஷாவுக்கும் இடையில் சினிமாவைக் கடந்து ஏதோ ஒன்று உள்ளது என திரைத்துறை வட்டாரங்களில் ஒரு பேச்சு உள்ளது. அதனால்தான், மற்றவர்கள் ஒரு வாழ்த்து சொல்வதைவிடவும், த்ரிஷா எதாவது சமூகவலைதளத்தில் பதிவிடும்போது, பெரிய விஷயமாக பார்க்கப்படுகின்றது.

valai pechu andhanan vijay thrisha

விஜய்க்கு விருப்பம்: திரைத்துறையில் நெருப்பு இல்லாமல் புகையாது. அப்படி புகைச்சலை ஏற்படுத்தி பல நேரங்களில் அது உண்மையாக மாறியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் இப்படியான தகவல்கள் வருவதை விஜய்யும் விரும்புகின்றார் என்பதை தெரிந்துகொள்ள முடிகின்றது. விஜய், நினைத்து இருந்தால், த்ரிஷாவிடம், பொதுவெளியில் வாழ்த்து போடவேண்டாம், தனிப்பட்ட முறையில் எனக்கு போன் செய்து வாழ்த்தினாலே போதும் எனக்கூறி இருக்கலாம். ஆனால் பொது வெளியில் இந்த விஷயம் வெளியே வருவதை அவரும் விரும்புகின்றார். அப்படியானால் மெல்ல மெல்ல இந்த சமூகத்திற்கு தங்களுக்குள் இருக்கும் உறவை சொல்ல நினைக்கின்றார்கள்" என அந்தணன் பேசியுள்ளார்.

valai pechu andhanan vijay thrisha

பரபரப்பு: அந்தணனின் இந்தப் பேச்சு பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. மேலும், விஜய் கட்சி தொடங்கிய நிகழ்வுகளில் அவரது மனைவி கலந்துகொள்ளவேயில்லை. அதுவுமே பல கேள்விகளை எழுப்பியது. இப்படியான சூழலில், கீர்த்தி சுரேஷ்ஷின் திருமணத்திற்கு விஜய் மற்றும் த்ரிஷா தனி விமானத்தில் சென்றது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதேநேரத்தில் விஜய்யின் அரசியல் வருகை பிடிக்காத சிலர்தான் இவ்வாறு விஜய் குறித்து தேவற்றை கருத்துக்களைத் தெரிவித்து வருவதாகவும் ரசிகர்கள் மத்தியில் பேச்சு பரவலாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X