Jana Nayagan: கரூர் நெரிசல் - ஜன நாயகன் சர்ச்சை.. பிரபலம் சொல்றதை கேட்டா தலையே சுத்துது!

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் ஜன நாயகன். இந்த படம் வரும் ஜனவரி மாதம் 9ஆம் தேதி பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் ஏற்கனவே நடந்து முடிந்து படத்தின் ப்ரீ புரெடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. இப்படி இருக்கும்போது, ஜன நாயகன் படம் குறித்த சர்ச்சைகள் கரூர் சம்பவத்திற்கு பின்னர் அதிகரித்துள்ளது. வலைபேச்சு அந்தணன் அதை மறுத்துள்ளார்.

அதாவது, கரூரில் விஜய் தனது கட்சிக்காக நடத்திய பிரச்சாரத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட மொத்தம் 41 பேர் மரணமடைந்தனர். தமிழ்நாட்டு அரசியல் களத்தில் இது போன்ற துயரச் சம்பவம் நடைபெற்ற தில்லை. இப்படி இருக்கையில் ஊடகங்களில் கரூர் மட்டும் இல்லாமல் விஜய் பிரச்சாரத்துக்கு செல்லும் பல இடங்களிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வீடியோக்கள் பதிவு செய்யப்படுகிறது. இது அனைத்து கட்சிகளும் செய்வதுதான். இப்படி இருக்கையில் கரூர் துயரச் சம்பவத்திற்கு பின்னர், ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பும் இந்த பிரச்சாரக் கூட்டங்களின் போது எடுக்கப்படுகிறது என்று தெரிவித்து ஊடகவியலாளர்கள் சிலரும் தெரிவித்து வருகிறார்கள்.

Valai Pechu Andhanan Put Full Stop About Karur Stampede Footages In Jana Nayagan Movie

'
புரளி - அந்தணன் விளக்கம்: இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் இணையதளத்தில் மறுப்பு தெரிவித்தனர். ஆனால் படக்குழு தரப்பில் இருந்து மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் இருந்தனர். இப்படி இருக்கும்போது, பிரபல சினிமா பத்திரிகையாளர் அந்தணன், தனது வலைப்பேச்சு யூடியூப் தளத்தில் இந்த தகவல் தொடர்பாக பேசுகையில் பல தகவலகளைப் பகிர்ந்து கொண்டார்.

சென்சாருக்கு ரெடி: அதாவது, " கரூர் சம்பவம் தொடர்பாக கடந்த சில நாட்களாக பொய்யான தகவல் ஒன்று பரவி வருகிறது. அதாவது, விஜய்யின் பிரச்சார காட்சிகள் ஜன நாயகன் படத்தில் இணைக்கப்போவதாக பலரும் பேசி வருகிறார்கள். ஆனால் ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. படத்தின் போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இது மட்டும் இல்லாமல், படத்தை சென்சாருக்கே கொண்டு செல்ல அவர்கள் தயாராக இருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது இந்த காட்சிகளை அவர்கள் எப்படி படத்துடன் இணைக்க முடியும்? எனவே அந்த தகவலில் உண்மை இல்லை.

Valai Pechu Andhanan Put Full Stop About Karur Stampede Footages In Jana Nayagan Movie

தேவை என்றால்: இது மட்டும் இல்லாமல், இப்படியான காட்சி தேவை என்றால் விஜய்க்கு ரூபாய் 250 கோடிகளும், இயக்குநருக்கு பல கோடிகளும் படத்தை உருவாக்க பல கோடிகளும் செலவு செய்து படமாக்கும் படக்குழுவினருக்கு இது போன்ற காட்சியை தனியாகவே எடுத்துக் கொள்வார்கள். இப்படி எடுக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை" என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த பேச்சு தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியிலும் சினிமா துறையினர் மத்தியிலும் இந்த தகவல் தற்போது வேகமாக பரவி வருகிறது. ஜன நாயகன் படம் விஜய்யின் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தை கே.வி.என் புரடெக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X