லியோ 10 நாளில் ஆயிரம் கோடி வசூல் பண்ணுமா? ரஜினி-லோகேஷ் படத்துக்கு சிக்கல்?

சென்னை: லியோ திரைப்படம் ஆயிரம் கோடியை வசூலிக்குமா என்பதை பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும் என்று வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார்.

Valai Pechu Anthanan about Thalapathy Vijays Leo film collection

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ வியாழக்கிழமை வெளியானது.

விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையிலான ஒப்பந்த சிக்கலால் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகே சென்னையின் பல திரையரங்குகளில் படம் வெளியானது.

ரூ.148.5 கோடி வசூல்: விஜய்யின் அட்டகாசமான நடிப்பில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவரும் நிலையில், லியோ படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.148.5 கோடி வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூ.38 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

ரசிகர்களுக்கு பிடித்துவிட்டது: இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள வலைப்பேச்சு, படத்தின் வசூல் ஒரு வாரத்திற்கு பக்காவாக இருக்கும் அதில் எந்தவிதமான மாற்று கருத்தும் இல்லை. ரசிகர்களுக்கு இந்தபடம் பிடித்து இருப்பதால், ஒரு வாரம் படத்தை திரும்ப திரும்ப பார்ப்பார்கள். இதைத்தாண்டி படம் பார்க்க உள்ளே வரும் ஒரு கூட்டம் தான் படத்தை விமர்சனம் செய்யும். அந்த கூட்டம் கொடுக்கும் மார்க் தான் படத்தை வெற்றிப்படமாக மாற்றும்.

சந்தேகம் தான்: மேலும், லியோ படத்திற்கு வந்து கொண்டிருக்கும் விமர்சனத்தை வைத்து பார்க்கும் போது, படம் ஜெயிலர் படத்தின் வசூலை தொடுமா என்பது சந்தேகம் தான். ஆனால் தொடர் விடுமுறை உள்ளதால், லியோ படத்தின் வசூல் பெரிய அளவில் இருக்கும். விடுமுறைக்கு பின் படத்தின் வசூலை பொருத்துத்தான் மகத்தான வசூலா இல்லையா என சொல்ல முடியும். ஆனால், விஜய்யின் இதுநாள் படத்திற்கு இல்லாத ஓபனிங் இந்த படத்திற்கு இருக்கிறது.

Valai Pechu Anthanan about Thalapathy Vijays Leo film collection

ரஜினி-லோகேஷ் படத்துக்கு சிக்கல்: லியோ படத்திற்கு வந்து கொண்டிருக்கும் விமர்சனங்களால், லோகேஷ் அடுத்து இயக்க உள்ள தலைவர் 171 படத்திற்கு நெருக்கடி இருக்கும் என்று, ரஜினி லோகேஷிடம் மொத்த கதையை சொல்லுப்பா என்று கேட்டாலும் கேட்பார் என்று வலைப்பேச்சு அந்தணன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X