Vijay: த்ரிஷா விவகாரம்.. விஜய்க்கு சீக்ரட் லைஃப் இருக்கு..பாலிலும் பன்னீரிலும் குளிச்சிட்டு வரல - அந்தணன்
சென்னை: நடிகர் விஜய் மற்றும் த்ரிஷாவுக்கு இடையிலான நட்பு குறித்த கிசுகிசுக்கள் கடந்த சில ஆண்டுகளாகவே கோலிவுட்டில் வலம் வந்த வண்ணம் உள்ளது. இது தொடர்பாக பலரும் பலவிதமாக ஓபனாகவே பேசினாலும் விஜய் மற்றும் த்ரிஷா தரப்பில் இருந்து நேரடி மறுப்புகள் எதுவுமே வெளிப்படவில்லை. ஆனால் மறைமுகமாக பல பதிலடிகளை இருவரும்வே கொடுத்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று அதாவது பிப்ரவரி 13ஆம் தேதி நடத்திய செய்தியாளர் சந்திப்பில், விஜய் முதலில் த்ரிஷாவிடம் இருந்து வெளியே வரவேண்டும் என்று காட்டமாக விமர்சித்தார்.
இந்த விமர்சனம் பெரும் சலசலப்பை அரசியல் தளத்திலும் சினிமா தளத்திலும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் சினிமா பத்திரிகையாளரும் யூடியூபருமான அந்தணன் தனது கடந்த காலங்களில் பல நேரங்களில் விஜய்க்கும் அவரது மனைவிக்கும் இடையில் த்ரிஷாவால் பிரச்னை வந்துள்ளதோ என்ற சந்தேகம் உள்ளது என்பது போல பேசி இருக்கிறார். வலைப்பேச்சு சேனலில் ஒருமுறை இருவருக்கும் இடையிலான உறவை அவர்களே மெல்ல மெல்ல பகிரங்கமாக அறிவிக்கிறார்கள் போல என்று எல்லாம் பேசி உள்ளார்.

விஜய் - த்ரிஷா: இப்படி இருக்கையில் பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் கருத்துக்கு அந்தணன் கொடுத்துள்ள பதில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, " விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார் என்பதால் விஜய் அரசியலில் தூய்மையாக இருக்க வேண்டுமாம். நான் ஒன்று கேட்கிறேன். தமிழ்நாடு அரசியலில் நீங்கள் நம்புகிற, விரும்புகிற தலைவர்களுக்கு எல்லாம் இன்னொரு வாழ்க்கை இருந்ததா இல்லையா? யாரை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். எல்லோருக்குப் பின்னாலும் ஒரு வாழ்க்கை இருந்துள்ளது.
தனிப்பட்ட வாழ்க்கை: அப்படி இருக்கையில் விஜய் மட்டும் என்ன நாள்தோறும் பாலில் குளித்து, பன்னீரைக் குடித்து விட்டா வருகிறார்? அவரும் உங்களைப் போல சராசரி மனிதர் தான். அவருக்கும் இன்னொரு வாழ்க்கை இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார். அந்தணனின் இந்த கருத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக பலரும் அந்தணன் என்ன சொல்ல வருகிறார்? விஜய்க்கும் த்ரிஷாவும் இடையில் பழக்கம் உள்ளது என்று சொல்ல வருகிறாரா? என்று எல்லாம் கேள்வி எழுப்பி வருகிறார்கள். நயினார் நாகேந்திரனின் கருத்துக்கு விஜய்யோ த்ரிஷாவோ இதுவரை கண்டனம் தெரிவிக்காமல் இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











