Vijaykanth : விஜயகாந்த் - ராவுத்தர் பிரிவுக்கு பிரேமலதா காரணமா? பிரபலம் சொல்வது என்ன?

சென்னை : நண்பர்களாக இருந்த விஜயகாந்த் , ராவுத்தர் பிரிவுக்கு பிரேமலதா தான் காரணம் என நீண்ட நாட்களாக பேசப்பட்டு வரும் நிலையில், அதற்கு வலைப்பேச்சு அந்தணன் விளக்கம் அளித்துள்ளார்.

விஜயகாந்த்தும், இப்ராகிம் ராவுத்தரும் மதுரையில் சிறு வயது முதலே நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள்.

ராவுத்தர் கதாசிரியராகவும், விஜயகாந்த நடிகராகவும் சினிமா வாய்ப்பைத் தேடி சென்னை வந்தனர். விஜயகாந்திற்கு படவாய்ப்பு கிடைத்து நடிக்க துவங்கியதும் அவர் நடிக்கும் படங்களை முடிவு செய்து வந்தார் ராவுத்தர்.

Valai pechu anthanan explain about Ibrahim Rowther and vijayakanth friendship

நட்பின் இலக்கணம் : விஜயகாந்த்துக்காக பலரிடமும் போய் நடிக்க வாய்ப்பு கேட்டு அவரின் வளர்ச்சியை பார்த்து பார்த்து மகிழ்ந்தவர் ராவுத்தர். இவர்களது நட்பை பார்த்து திரையுலமே ஆச்சரியப்படும் அளவுக்கு இருந்தது. ராவுத்தர் பேச்சை விஜயகாந்த் தட்ட மாட்டார், விஜயகாந்த் பேச்சை ராவுத்தர் தட்ட மாட்டார் என இருவரும் நட்பிற்கு இலக்கணமாகவே இருந்தனர்.

பிரேமலதா காரணமா : ஆனால், விஜயகாந்த்துக்கு திருமணமான பின்னர் படிப்படியாக ராவுத்தர் ஓரம் கட்டப்பட்டதாகவும், இருவரின் பிரிவுக்கு பிரமலதா தான் காரணம் என்றும், கடைசி காலத்தில் ராவுத்தரை பார்த்துக்கொள்ளாமல் விட்டுவிட்டார் அந்த குற்ற உணர்ச்சிதான், இன்றைய விஜய்காந்த்தின் மோசமான உடல்நிலைக்கு காரணம் என்ற பேச்சுக்களும் எழுந்தன.

பிரேமலதாவின் கன்ட்ரோலில் : இது குறித்த கேள்விக்கு பதிலளித்த வலைப்பேச்சு அந்தணன், விஜய்காந்தின் மோசமான உடல்நிலைக்கு காரணம் அவருடைய முந்தைய பழக்கவழக்கங்கள் தான். இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்களாக இருந்தனர். விஜய்காந்தின் வளர்ச்சியில் ராவுத்தருக்கு பெரிய பங்கு உண்டு. ஆனால், விஜய்காந்திற்கு திருமணம் ஆன பிறகு நிலைமை அப்படியே மாறிவிட்டது. அனைத்தும் பிரேமலதாவின் கன்ட்ரோலில் சென்றுவிட்டது.

Valai pechu anthanan explain about Ibrahim Rowther and vijayakanth friendship

ஏமாற்றவில்லை : திருமணத்திற்கு முன்பு வரை, படத்திற்கு டேட் பார்த்தது, சம்பளம் பேசியது எல்லாமே ராவுத்தர் தான். அந்த பணத்தை எல்லாம் எதில் முதலீடு செய்ய வேண்டும் என்ற முடிவைக்கூட ராவுத்தர் தான் எடுப்பார். திருமணத்திற்கு பின், ராவுத்தரை முறையாக அழைத்து அவருக்கு சேரவேண்டிய சொத்துக்கள் எல்லாம் பிரித்து கொடுக்கப்பட்டது. ராவுத்தரை ஏமாற்றி அனுப்பிவிடவில்லை, அவருக்கு சேரவேண்டிய பல கோடி சொத்துக்களை கொடுத்துதான் அனுப்பி வைத்தார்.

காய்ச்சல் தான் காரணம் : ஆனால், நண்பனை பிரிந்து விட்டோம் என்ற வருத்தம் அவருடைய மனதில் இருந்தது, ராவுத்தரின் இறுதிச்சடங்கில் கூட விஜய்காந்த் கதறி அழுதார். ஆனால், ராவுத்தர் இறந்ததுதான் விஜய்காந்தின் இந்த மோசமான நிலைமைக்கு காரணம் என்று சொல்லிவிட முடியாது.அவருக்கு திடீர் என்று ஒரு காய்ச்சல் ஏற்பட்டது. அதன் பிறகு தான் விஜய்காந்தின் உடல்நிலை மோசமாகிவிட்டது என்று வலைப்பேச்சு அந்தணன் பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X