இந்த குப்பைத்தொட்டிக்கு ஏன் வந்தீங்க.. கமலின் மரியாதையே போச்சு.. ஆதங்கப்பட்ட வலைப்பேச்சு அந்தணன்!

சென்னை: கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து அவரின் மரியாதையை கெடுத்துக்கொண்டார் என்று வலைப்பேச்சு அந்தணன் ஆதங்கத்துடன் பேசி உள்ளார்.

பெண் போட்டியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், பிரதீப் தவறான போட்டியாளர் என்றும் பெண்களிடம் மோசமாக நடந்துக் கொள்கிறார் என்று பெண்கள் உரிமைக்குரல் எழுப்பியதை அடுத்து அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.

valai pechu Anthanan expresses concern over negative criticism of Kamal Haasan

பிரதீப் ஆண்டனியின் தரப்பு வாதத்தை கேட்காமல் பிரதீப்பை வெளியில் அனுப்பிய கமல்ஹாசனை சோஷியல் மீடியாவில் படு கேவலமாக கழுவி ஊற்றினார்கள்.

வெளுத்து வாங்கிய கமல்: இதுகுறித்து, சனிக்கிழமை எபிசோடில் பேசிய கமல், மாயா, பூர்ணிமா, ஜோவிகா மற்றும் ஐஷூவை பார்த்து, நீங்கள் பிரதீப் மீது வைத்த குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மை தானா என்றார். மேலும், ரெட் கார்டு நான் கொடுக்கவில்லை. அதற்கான அதிகாரம் உங்களிடம் தான் இருந்தது. அதை நீங்கள் மறந்த இருப்பீர்கள் நான் ஞாபகப்படுத்துகிறேன் என்று அடுத்தடுத்து குறும்படத்தை வெளியிட்டார்.

திக்கு முக்காடிய மாயா: மேலும், சிகப்பு மஞ்சளா தெரிந்தது என்றால், உங்களுக்கு என்ன மாலைக்கண்ணா, கொடுக்க மாட்டேன்னு சொல்லி இருக்கலாமே, அது உங்கள் உரிமை தானே, என சரமாரியாக கேள்வி கேட்டு போட்டியாளர்களை வறுத்தெடுத்தார். கமல்ஹாசனின் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்ல முடியாமல் நான்கு பெண்ணு திணறினார்கள்.

மரியாதை இல்லை: இதுகுறித்து, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள வலைப்பேச்சு அந்தணன், அதில், திருவாருர் தேர் திருவல்லிக்கேணி சந்துக்குள் வந்தால் என்ன ஆகுமோ அதுதான் கமலஹாசனின் நிலைமையாக இருக்கிறது, பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் கமல் ஒரு மகா நடிகன், மிகப்பெரிய சாதனையாளர் என்பதை எல்லாத்தையும் மறந்துவிட்டு ரொம்ப சாதாரணமாக அவரிடம் நடந்து கொள்கிறார்கள்.

மோசமான வதந்தி: பிரதீப் வெளியே அனுப்பப்பட்டது குறித்து கமல் பல விளக்கம் கொடுத்த போதும், இணையவாசிகளுக்கு அவர் மீதான கோவம் போகவில்லை. மோசமாக நடந்து கொண்ட மாயாவை வெளியேற்றாமல் கமல் சமாளிப்பதற்கு காரணம், மாயா விக்ரம் படத்தில் நடித்தவர் என்றும், அவருக்கும் கமலுக்கும் ஒரு நெருக்கம் இருக்கு என்றும் இணையவாசிகள் வதந்தியை பரப்பி வருகின்றனர்.

குப்பை தொட்டிக்கு எதுக்கு வந்தீங்க: இதையெல்லாம் பார்க்கும் போது, இவ்வளவு பெரிய சாதனையாளர் நீங்க எதுக்கு இந்த குப்பை தொட்டிக்கு வந்தீங்க, உங்களுடைய மரியாதையை நீங்க காப்பாற்றிக் கொள்ள வேண்டும். பணம் தான் முக்கியம் என்றால், அதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம், உங்களுடைய மரியாதையை நீங்கள் ஏன் இழக்கிறீர்கள் என்று வலைப்பேச்சு அந்தணன் ஆதங்கத்துடன் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X