லியோ இசைவெளியீட்டு விழா.. விஜய் பேசப்போறது இதுதான்.. வலைப்பேச்சு அந்தணன் சொல்லும் சீக்ரெட் விஷயம்!
சென்னை: லியோ இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசப்போறது என்ன என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு என வலைப்பேச்சு அந்தணன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் லியோ. இந்தப் படம் அக்டோபர் 19ந் தேதி வெளியாக இருக்கிறது.
லலித்குமார் தயாரித்துள்ள இப்படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

தளபதி விஜய்: இதையடுத்து அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய் 3 வேடங்களில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. சினேகா, பிரியங்கா அருள் மோகன் நாயகிகளாக நடிக்க இருப்பதாகத் தெரிகிறது. இதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
இணையத்தில் வைரல்: நேற்று முன்தினம் சென்னை திரும்பிய விஜய் நேற்று தனது பெற்றோரை நேரில் சந்தித்தார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் கருத்து வேறுபாடு இருந்த நிலையில் இருவரின் சந்திப்பு பரபரப்பாக பேசப்பட்டது.
அந்தணன் பேட்டி: இந்நிலையில், இதுகுறித்து பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள வலைப்பேச்சு அந்தணன், தனது மகனை ஆரத்தழுவ வேண்டும் என்று நினைத்து நேரு ஸ்டேடியத்தில் காத்திருந்த எஸ்.ஏ.சந்திரசேகரை, மற்றவர்களைப் போல பத்தோட பதினென்னா விஜய் கடந்து போனதை பார்க்கும் போது நமக்கே மனசு வலித்தது. ஆனால், இப்போது எஸ்.ஏ.சந்திர சேகர் எதற்காக ஏங்கினாரோ அது நடந்துவிட்டது.
சேர்ந்து விட்டனர்: இதயத்தில் பிரச்சனை ஏற்பட்டு அதற்காக ஆஞ்சியோ செய்யக்கூடிய அளவிற்கு அவரின் உடல்நிலை மோசமாகி இருக்கிறது என்றால், அதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், இனிமேல் இந்த பிரச்சனை வராது இனி இருவரும் சேர்ந்தே பயணம் செய்வார்கள்.

இசைவெளியீட்டு விழா: லியோ படத்தின் இசைவெளியீட்டு விழாவிற்கு முன்பாக ப்ரீ ரிலீஸ் விழா கோலாலம்பூரில் நடக்க இருக்கிறது. அதற்கான பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. ஆனால், விஜய் கலந்து கொள்வது சந்தேகம் என்பதால், அந்த விழா நடைபெறுவது சந்தேகம் தான்.
சென்னையில் நடைபெறும் இசைவெளியீட்டு விழாவை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இதில் என்ன பேசப்போகிறார் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் மட்டுமில்லாமல், அரசியல் கட்சித் தலைவர்களும் ஆர்வமுடன் உள்ளனர். திட்டமிட்டபடி நேரு ஸ்டேடியத்தில் தான் நடைபெறும். நாடாளுமன்றத் தேர்தல் வரும் இந்த நேரத்தில் அரசு விஜய் ரசிகர்களை நிச்சயம் பகைத்துக்கொள்ளாது என்று வலைப்பேச்சு அந்தணன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











