GOAT படத்திற்கு சன் பிக்சர்ஸ் போட்ட கண்டிஷன்.. வலைப்பேச்சு அந்தணன் பேட்டி!
சென்னை: விஜய் நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் விஎஃப்எக்ஸ் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் கோட் படக்குழுவிற்கு ஒரு கன்டிஷன் போட்டு உள்ளதாக வலைப்பேச்சு அந்தணன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
லியோ படத்தின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தில் நடித்து வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அப்பா, மகன் என இரண்டுவிதமான கதாபாத்திரத்தில் விஜய் நடித்துள்ளார். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்: அதிக பட்ஜெட்டில் உருவாகி உள்ள ஃபேண்டஸி படமான கோட் படத்தில் அதிக எண்ணிக்கையிலான விஎஃப்எக்ஸ் காட்சிகள் இருப்பதால்,இந்த விஎஃப்எக்ஸ் காட்சிகளை சிறப்பாக வடிவமைப்பதற்காக அவதார், 'கேப்டன் மார்வெல், 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' போன்ற படங்களுக்கும் விஎஃப்எக்ஸ் காட்சிகளை வடிவமைத்த குழுவினர் இப்படத்தில் இணைந்து பணிகளை முடித்துள்ளனர். இளம் விஜய்யின் பகுதிகளை படமாக்க டி-ஏஜிங் டெக்னிக்கை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது, மேலும் கோட் படத்தில் ஹாலிவுட் பணியாளர்கள் பணியாற்றியது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வலைப்பேச்சு அந்தணன்: இந்நிலையில் சினிமா பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு அந்தணன் அளித்துள்ள பேட்டியில், கோட் திரைப்படம் செப்டம்பர் 5ந் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக உள்ளது. இது சிவகார்த்திகேயன் தேதி, அந்த நேரத்தில் தான் கோட் படமும் வெளியாகும் என்பதால், கொல குத்தா இருக்கக்போகிறது. அது மட்டுமில்லாமல், கோட் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், படக்குழுவிற்கு ஒரு கண்டிஷன் போட்டு உள்ளது. விஜய் அரசியலுக்கு வர இருப்பதால், அரசியல் வசனம் வேண்டாம் என்று சொல்லி இருக்கிறது.
அரசியல் வசனம் வேண்டாம்: போதுவாகவே விஜய் படத்தில் அரசியல் வசனம் இருக்கும், இப்போது திமுக ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. ஒருவேளை திமுகவிற்கு எதிராக எதாவது வசனத்தை சொல்லி அது நாளை பிரச்சனை ஆகிவிடக்கூடாது என்பதால், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இந்த கண்டிசனை போட்டு இருப்பதாக கூறப்படுகிறது. செட்டிலைட் உரிமையை வாங்குனா, அந்த வசனத்தை கட் செய்து விடுவோம் என்று சொல்லி இருந்தது, ஆனால், செட்டிலைட் உரிமை சன் பிக்சர்ஸ் வாங்கவில்லை என்று அந்தணன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











