கோவில் கோவிலாக சுற்றும் சமந்தா.. சாமியாராகிறாரா? பிரபலம் சொல்வது என்ன?

சென்னை: கோவில் கோவிலாக சுற்றும் சமந்தா சாமியாராகப் போவதாக இணையத்தில் பரவி வரும் செய்திக்கு வலைப்பேச்சு அந்தணன் விளக்கம் கொடுத்துள்ளார்.

நடிகை சமந்தா விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகும் குஷி படத்தை முடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 1ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

அதை தொடர்ந்து சமந்தா உலக புகழ் பெற்ற வெப் தொடரான சிட்டாடேல் தொடரின் இந்திய தயாரிப்பில் கதாநாயகியாக நடித்து முடித்துள்ளார். இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கும் இத்தொடரில் வருண் தவான் கதாநாயகனாக நடித்துள்ளார்.

Valai Pechu Anthanan shared interesting information about samanthas spiritual journey

நடிகை சமந்தா: ஒப்பந்தமாகியிருந்த படங்களை முடித்த சமந்தா, வேலூரை அடுத்து உள்ள ஸ்ரீபுரம் தங்க கோவிலுக்கு சென்று சாமி தரிசனம், மேலும், அங்குள்ள சுவர்ண லட்சுமி அம்மன் சிலைக்கு பால் அபிஷேகம் செய்தார். அதன் பின் ஈஷா யோகா மையத்தில் பக்தர்களுடன் பக்தராக அமர்ந்து தியானம் மேற்கொண்டார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதை அடுத்து, சமந்தா சினிமாவிட்டு விலகுவதாகவும், சாமியாராகப் போவதாகவும் செய்திகள் பரவின.

பிஸியான நடிகையாக இருந்தார்: இந்நிலையில், வலைப்பேச்சு அந்தணன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பேசிய அவர், கடவுள் சமந்தாவிற்கு ஒரு பக்கம் இனிப்பான வாழ்க்கையும், மறுபக்கம் கசப்பான காரமான வாழ்க்கையை கொடுத்து விட்டார். நயன்தாரா, த்ரிஷா இவர்கள் எல்லாம் ஒதுங்கி இருந்த நேரத்தில், நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு, கன்னடம் என சினிமாவில் படு பிஸியாக இருந்தார்.

நடிக்க முடியாமல் போனது: திடீரென 5 கோடி சம்பளம், பாலிவுட் அழைப்பு என வெகு விரைவில் வளர்ந்து வந்தார். ஆனால், திடீரென அவருக்கு ஏற்பட்ட அரியவகை நோயால், பல கோடி சம்பளம் பேசப்பட்ட வெப் தொடர்களில் நடிக்க முடியாமல் போனது. ஒரு கட்டத்தில் சமந்தா சினிமாவை விட்டு விலகி சென்றுவிடும் அளவுக்கு அவர் உடல் நிலை மோசமாக ஆனது.

ஆன்மீகத்தில் ஈடுபாடு: அதன் பிறகு வெளிநாட்டிற்கு சென்று பல சிகிச்சைகளை செய்தார். அதுவும் பலன் அளிக்காமல் போனதால் கேரளாவில் தங்கி ஆயுர்வேத சிகிச்சை செய்து அந்த அறியவகை நோயில் இருந்து தற்போது மீண்டு வந்துள்ளார். ஆனால், அதன் பிறகு அவருக்கு ஆன்மீக சிந்தனை வந்து விட்டது. ஏன் என்றால், இல்லாமலே போய்விடுவோம் என்ற நினைத்த போது தன்னை மீண்டு வந்து கொடுத்தது இறைவன் தான் என்று சமந்தா நம்புவுவதால், அவருக்கு ஆன்மீகத்தின் மீது அதிக ஈடுபாடு ஏற்பட்டுள்ளது.

சாமியாராக போகிறார்: இதைப்பார்த்த சில பத்திரிக்கைகள் இனிமேல் சமந்தா சினிமாவில் நடிக்க வாய்ப்பு இல்லை என்றும், அவர் சாமியாராக போகிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியானது. ஆனால், அப்படி எல்லாம் இல்லை, இந்த பயணத்தை முடித்துவிட்டு வந்து அவர் தொடர்ந்து சினிமாவில் நடிப்பார் என்று வலைப்பேச்சு அந்தணன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Read more about: valai pechu anthanan samantha
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X