பொய் சொன்ன ரஜினி… கோபப்பட்ட டி ராஜேந்தர்.. என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: நடிகர், பாடகர், இசையமைப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கி வருபவர் டி.ராஜேந்தர். 80களில் முன்னணி இயக்குனராக வலம் வந்த இவருக்கு சின்னதா யாராவது தவறு செய்தால் பொசுக்குனு கோவம் வந்துவிடும். அப்படிப்பட்ட இவர் ரஜினியிடம் கோவப்பட்டு அவரை திட்டி உள்ளார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் முக்கியமானவராக இருக்கிறார் டி.ராஜேந்தர், இவர் ஒரு தலை ராகம், என் தங்கை கல்யாணி, ரயில் பயணங்களில், உயிருள்ள வரை உஷா போன்ற பல்வேறு பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவருடைய படங்களில் ஆபாச காட்சிகள் எதுவும் இருக்காது என்பதால், இவரது படங்கள் பேமிலி ஆடியன்சுக்கு மிகவும் பிடித்தமான படமாக இருக்கும்.

வலைப்பேச்சு அந்தணன்: இந்நிலையில் சினிமா பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு அந்தணன், ரஜினியிடம் டிராஜேந்தர் கோபப்பட்ட சம்பவம் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில், நான் அப்போது டி ஆர் ராஜேந்திரிடம் வேலை செய்து கொண்டிருந்தேன். அவர் அப்போது டெரர் பீஸாக இருந்தார். இப்போது காமெடி பீஸாக மாறிவிட்டார். அன்று டிஆர் ராஜேந்திரன் என்று சொன்னாலே, அனைவரும் பயந்து ஓடுவார்கள் அதற்கு காரணம் பொசுக்குனு கோபப்பட்டு கன்னாபின்னானு திட்ட ஆரம்பித்து விடுவார்.
போன் போட்ட டிஆர்: இந்த நேரத்தில், ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவர் படப்பிடிப்பில் வீட்டிற்கு சென்று விட்டதாக செய்தி வந்தது. இதை கேள்விப்பட்ட டி ராஜேந்திரன், உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக, வி கே சுந்தரை அழைத்து, ரஜினிக்கு போன் போடு என்று சொன்னார். அப்போது வி கே சுந்தர், நாங்கள் டி ராஜேந்தர் வீட்டிலிருந்து பேசுகிறோம். ராஜேந்தர் ரஜினியுடன் பேச விருப்பப்படுகிறார் என்று சொன்னார். அப்போது ரஜினியின் மேனேஜர், உங்களை திருப்பி அழைக்கிறோம் என்று போனை துண்டித்து விட்டார். ஏன் என்றால், ரஜினியின் ரசிகர்கள் அடிக்கடி எதாவது ஒரு பெயரை சொல்லி பேசுவார்கள் என்பதால் மேனேஜர் அப்படி கூறினார்.
கடுப்பான டி ராஜேந்தர்: உண்மையில் அது டிஆர் நம்பர் என்று தெரிந்ததும், கொஞ்ச நேரத்தில் ஒரு போன் கால் வந்தது. அந்த போன் காலில் பேசியவர், நாங்கள் ஏவிஎம் நிறுவனத்தில் இருந்து பேசுகிறோம் சரவணன் சார் உங்களிடம் பேச வேண்டுமாம் என்று சொன்னார். இதனையடுத்து பதறிப்போன டி ராஜேந்தர் போனை வாங்கி பேச, மறுமுனையில் நான் ரஜினி பேசுகிறேன் என்றதும் டிஆர் கடுப்பாகி விட்டார். எதுக்கு ரஜினி ஏவிஎம் ஸ்டுடியோன்னு சொல்லிட்டு பேசுறீங்க, இப்படி எல்லாம் என்கிட்ட பண்ணாதீங்க என்று கடுமையாக திட்டிவிட்டு போனை துண்டித்துவிட்டார். அதன் பின் கிட்டத்தட்ட நான்கு முறை ரஜினி தரப்பில் இருந்து போன் வந்த போதும், போனை எடுக்காமல் இருந்த டிஆர் ஒரு கட்டத்தில், மனம் இறங்கி போனை எடுத்து, நலம் விசாரிக்க, இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.
சூப்பர் ஸ்டாரின் சம்மந்தி: ரஜினி மீது ஒரு போன் காலுக்காக கோபப்பட்ட டிஆர், சிம்பு மற்றும் ஐஸ்வர்யா ரஜினி இருவரும் காதலிப்பதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்ட போது, டிஆர் ஒருவரிடம் போனில் நான் யாரு தெரியுமா சூப்பர் ஸ்டார் சம்மந்தி என பெருமையுடன் பேசினாராம். இவ்வாறு ரஜினி பெரிய நிலைமைக்கு வந்தவுடன் டிஆர் அந்தர்பல்டி அடித்துவிட்டார் என்று அந்தணன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











