சப்பை கட்டு கட்டாதீங்க விஜய்.. வாயைத் திறந்து பேசுங்க.. என்னங்க இவரே இப்படி சொல்லிட்டாரு

சென்னை: ஜன நாயகன் படத்தின் சென்சார் பஞ்சாயத்து இன்று எப்படியாவது நீதிமன்றத் தீர்ப்பால் முடிவுக்கு வரும் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால், நீதிமன்றமோ, தனி நீதிபதி அமர்வு விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. இப்படி இருக்கையில் இந்த விவகாரம் தொடர்பாக விஜய் எதுவுமே பேச மறுக்கிறாரே என்று வலைபேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார். இவரது இந்த கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் விஜய் பேசும்போது கூட ஜன நாயகன் படம் குறித்து ஒரு வார்த்தை பேசவில்லை. மறைமுகமாக பேசியதையும் விஜய் குழப்பும் வகையில் பேசியுள்ளாரே என்று அந்தணன் விமர்சித்துள்ளார்.

Valai Pechu Anthanan Slams Actor Vijay For Jana Nayagan Censor Issue

விஜயின் மழுப்பல் பேச்சு: விஜய் பேசுகையில், " இந்த விஜய் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தா, எழுதி வச்சிக்கோங்க, இதுக்கு முன்னாடி இருந்தவங்க மாதிரியோ, இப்ப இருக்கவங்க மாதிரியோ ஊழல் செய்யவே மாட்டேன், ஒரு பைசா தொட மாட்டேன். எனக்கு அத தொட வேண்டிய அவசியமே இல்ல. இது என்ன முதல்வன் படமா? ஒரே நாள்ல வந்து இவரு சுத்தம் பண்ணிடுவாரா?னு கேட்கலாம். ஆனா, அது ஒரு பிராசஸ், அதுக்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். எதுக்கும் ஆசைப்படாதவன் கண் முன்னாடி ஊழல் நடந்தா அத பாத்துட்டு அவன் சும்மா இருப்பான்னு நினைக்கிறீங்களா?

அழுத்தமா?: நாம் மிக மிக முக்கியமான கால கட்டத்தில் இருக்கிறோம். நான் ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், ஏதோ அழுத்தம் இருக்கும் என்று நினைக்கிறீர்களோ? அழுத்தமா?.. நமக்கா?., இந்த அழுத்தத்திற்கு எல்லாம் அடங்கிப்போகிற ஆளா இந்த ஆளு? இந்த மூஞ்சியைப் பார்த்தால் அப்படியா தெரிகிறது உங்களுக்கு? அதனால் அப்படியெல்லாம் நடக்காது, அதுவும் நம்மகிட்ட அப்படியெல்லாம் நடக்கவே நடக்காது" என்று பேசியிருந்தார்.

Valai Pechu Anthanan Slams Actor Vijay For Jana Nayagan Censor Issue

அந்தணன்: இப்படி இருக்கையில் நடிகர் விஜய் ஜன நாயகன் பிரச்னை குறித்து ஒரு வார்த்தை கூட பேசாதது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் வலைப்பேச்சு அந்தணனும் விமர்சித்துள்ளார். அதாவது, விஜய் தனது படத்தின் பிரச்னை குறித்தே பேசாமல் இருக்கிறார். பேசியதும் ஏதோ சப்பை கட்டு கட்டுவது போல இருக்கிறது. வாயைத் திறந்து பேசுங்க விஜய் என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X