Vijay: விஜய்க்கும் த்ரிஷாவுக்கும் திருமணமா? விஜய்யை ஒழித்துக் கட்டுவதே அவங்கதான்.. பிரபலம் விளாசல்
சென்னை நடிகர் விஜய் அரசியல் களத்தில் பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறார். ஒருபுறம் அவரது ரசிகர்கள் இணையத்தில் தொடர்ந்து மற்ற சினிமா பிரபலங்களையும் அவரது ரசிகர்களையும் மோசமாக விமர்சித்து வருகிறார்கள். இதனால் தவெகவுக்கு நாளுக்கு நாள் அதிருப்தி கிடைத்து வந்த நிலையில், விஜய்யின் விவாகரத்து வழக்கு பெரும் பின்னடைவை அவருக்கு உருவாக்கியது என்றுதான் கூற வேண்டும். இப்படி இருக்கையில் நடிகை த்ரிஷாவுடன் அவர் இணைந்து திருமண நிகழ்ச்சிக்குச் சென்றது எல்லாம் விஜய் எடுத்த தவறான முடிவுகளில் ஒன்று என்றும் பலரும் விமர்சித்து வந்தனர்.
இப்படி இருக்கையில் விஜய்க்கு தொடர்ந்து ஆதரவாக கருத்து தெரிவித்து வந்த வலைப்பேச்சு அந்தணன், நடிகை த்ரிஷா மற்றும் த்ரிஷாவின் அம்மா என இருவரும் தான் விஜய்யை விஜய்யை ஒழித்துக் கட்டுவதற்கான வேலையைச் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று காட்டமாக விமர்சித்துள்ளனர்.

நடிகர் விஜய் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார், அதை பலமுறை கண்டித்தும் அதை அவர் கைவிடுவதாக இல்லை, தொடர்ந்து நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார். இதனால் நானும் எனது குழந்தைகளும் மிகவும் மனதளவில் பாதிக்கப்படுகிறோம். ஆனால் நடிகர் விஜய் அந்த நடிகையுடன் வெளிநாடுகளுக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கும் சென்று புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். எனவே விவாகரத்து வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடினார். அதன் பின்னர் த்ரிஷாவுடன் திருமண நிகழ்ச்சிக்கு ஒன்றாக சென்றார். இந்த விவகாரமே விஜய்க்கு பின்னடைவை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசும் போது, " நீங்க வருத்தப்படாதீங்க, அது எல்லாம் அந்த அளவுக்கு ஒர்த் இல்லை" என்று மோசமாக விமர்சித்தார். இதனாலும் பெரும் அதிருப்தியை விஜய்க்கு ஏற்படுத்தியது.
இப்படி இருக்கையில் நடிகர் விஜய்க்கும் நடிகை த்ரிஷாவுக்கும் விரைவில் திருமணம் நடக்கவுள்ளது என்று யாரோ ஒரு நெட்டிசன் சமூக வலைதளத்தில் பதிவிட்ட போஸ்ட்க்கு த்ரிஷாவின் தாயார் லைக் போட்டிருந்தார். இது பலரது கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல், எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல இருந்தது.

அந்தணன் விளாசல்: இப்படி இருக்கும்போது, வலைபேச்சு அந்தணன் அண்மையில் அளித்த பேட்டியில், " நான் எல்லாம் விஜய்க்கு ஆதரவாக பேசிக் கொண்டு இருந்தவன் தான். அதுவும் புதியவர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் அவர்களை ஆதரிப்போம் என்று ஆதரித்துக் கொண்டு இருந்தேன். ஆனால் அவர்களின் நடவடிக்கைகள் அப்படியானதாக இல்லை. விஜய்க்கும் த்ரிஷாவுக்கும் திருமணம் என்ற போஸ்டுக்கு த்ரிஷாவின் அம்மா லைக் போட்டுள்ளார் என்றால், அதற்கு என்ன அர்த்தம்?
விஜய்யை ஒழித்துக் கட்டுவதே அவங்கதான்: இந்த சம்பவம் விஜய்க்கு எவ்வளவு பெரிய சரிவை ஏற்படுத்தியது என்பது த்ரிஷாவின் அம்மாவுக்கு தெரிய வேண்டுமா? இல்லையா? அதை விட்டுவிட்டு லைக் போட்டால் என்ன அர்த்தம். விஜய்யை ஒழித்துக் கட்டும் வேலையை த்ரிஷாவும் த்ரிஷாவின் அம்மாவும் தான் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்" என்று காட்டமாக தெரிவித்துள்ளார். இவரது இந்த பேச்சு பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











