துருவ நட்சத்திரம் பட சிக்கல்.. ரூ.60 கோடி கடன்.. மனஅழுத்தத்தில் கௌதம் மேனன்!
சென்னை: விக்ரம் - கெளதம் மேனன் கூட்டணியில் உருவான துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாவதில் பல சிக்கல் இருப்பதால் கௌதம் மேனன் மன அழுத்தத்தில் இருக்கிறார்.
2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவநட்சத்திரம் திரைப்படம் பல தடைகளை தாண்டி, நவம்பர் 24 ந் தேதி வெளியாக இருந்தது.

ஆனால், கடைசி நேரத்தில் துருவ நட்சத்திரம் ரிலீஸில் ஆகவில்லை. இதனால் ரசிகர் மிகுந்த வேதனை அடைந்தனர்.
துருவநட்சத்திரம்: 7 ஆண்டுக்கு மேலாக துருவ நட்சத்திரம் திரைப்படம், பண பிரச்சினை காரணமாக வெளியாகவில்லை. இயக்குநர் கௌதம் மேனன், சிம்புவை கதாநாயகநாக வைத்து சூப்பர் ஸ்டார் என்ற படத்தை இயக்கவிருந்தார். இக்கூட்டணியில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு என மூன்று படங்கள் வெளியாகின.
கடைசி நேரத்தில் தடை: சூப்பர் ஸ்டார் என்ற படத்துக்காக, ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து கெளதம் மேனன் 2.40 கோடி ரூபாய் பணம் வாங்கி இருந்தார். அந்த பணத்தை அவர் இப்போது வரை திருப்பிக் கொடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால், தங்களுக்கு தர வேண்டிய பணத்தை கொடுக்காமல், துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடக்கூடாது என, ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடைபெற்றதால், துருவநட்சத்திரம் படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.
60 கோடி ரூபாய் கடன்: இந்நிலையில், இதுகுறித்து பேட்டி அளித்துள்ள மூத்த சினிமா பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு அந்தணன், அதில், துருவநட்சத்திரம் திரைப்படத்திற்கு 60 கோடி ரூபாய் பிரச்சனை, கௌதம் மேனன் இதுவரை வாங்கிய கடன் எல்லாமே சேர்ந்து இந்த படத்தின் மீது விழுந்து விட்டது. இந்த படத்திற்காக கௌதமே பல பிரச்சனை சந்தித்துள்ளார்.
பிரச்சனை தீர்ந்தது: கௌதம் மேனன் இந்த படத்திற்கு வாங்கியு கடனால் தான் படத்திலேயே நடிக்க வந்தார். அவரால் படத்தில் நடிக்கவும் முடியவில்லை, சிந்திக்கவும் முடியாமல் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறார். ஆனால், இந்த படம் வெளியில் வந்துவிட்டால் அவருடைய அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும். இப்போது விநியோகஸ்தர் அருள்பதி தலையிட்டு பிரச்சனை பேசி தீர்த்து இருக்கிறார். இதனால், படம் டிசம்பர் 1ந் தேதி திட்டமிட்டபடி வெளியாகும் என்று அந்தணன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











