சைந்தவி - ஜி வி பிரகாஷ் விவாகரத்து.. அந்த நடிகர் காரணமா? பிரபலம் சொன்ன தகவல்!

சென்னை: இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் பாடகி சைந்தவி தம்பதிகள் சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், இருவரும் அதிகாரப்பூர்வமாக பிரிந்துவிட்டதாக அறிக்கை வெளியிட்டு பிரிந்துள்ளனர். இவர்கள் பிரிந்ததற்கான காரணம் தெரியாத நிலையில், வலைப்பேச்சு அந்தணன் இவர்களின் விவாகரத்து குறித்து பேசியுள்ளார்.

10ம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும் போதே, ஜிவி பிரகாஷும், சைத்தவியும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2013ஆம் ஆடு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு, அன்வி எனும் 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. ஜி.வி.பிரகாஷின் இசையில் சைந்தவி பல பாடல்களை பாடி உள்ளார். தனுஷ் நடித்த அசுரன் படத்தில் இடம் பெற்ற எள்ளு வய பூக்கலையே பாடல் மிகப்பெரிய அளவில் டிரெண்டிங்கானது.

Valai pechu Anthanan talks about gv prakash and saindhavi divorce

பிரிந்தனர்: கடந்த சில நாள்களாக ஜிவி பிரகாஷும் சைந்தவியும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விரைவில் இருவரும் விவாகரத்து பெற இருப்பதாக தகவல் இணையத்தில் பரவி ரசிகர்கள் அதிர்ச்சி அடைய செய்த நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில், ஜி.வி.பிரகாஷ், சைந்தவி இருவரும் தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில், எங்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகளுக்குப் பின், நீண்ட யோசனைக்குப் பிறகு ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையுடன் எங்கள் மன அமைதிக்காகவும் மேம்பாட்டுக்காகவும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம்.

கடினமான நேரத்தில்: இந்தத் தருணத்தில், எங்கள் தனி மனித சுதந்திரத்தைப் புரிந்துகொண்டு மதிக்குமாறு ஊடகங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். எங்கள் இருவருக்கும் இதுதான் சிறந்த முடிவு என்று நாங்கள் நம்புகிறோம். இந்தக் கடினமான நேரத்தில் உங்கள் புரிதல் மற்றும் ஆதரவு எங்களுக்கு உதவியாக இருக்கும் என அறிக்கை வெளியிட்டுவிட்டு பிரிந்தனர்.

வலைப்பேச்சு அந்தணன்: இவர்களின் விவாகரத்து குறித்து பேட்டி அளித்துள்ள வலைப்பேச்சு அந்தண்ன், ஏஆர் ரஹ்மான், தாய்மாமன் - மருமகன் என்பது பலமான உறவாக இருந்தாலும், இருவருக்கும் இடையே பெரியளவில் உறவும் இல்லை என்பது தான் உண்மை. ஏ ஆர் ரகுமான் சிபாரிசு இல்லாமல் தான் ஜிவி பிரகாஷ் தன் கேரியரை தனியாக தொடங்கினார். அதன்பின் தான் ரகுமானிடம் அவருக்கு வாய்ப்பே கிடைத்திருக்கிறது.

யார் தலையீடும் இல்லை: இப்படி இருக்கும் போது ஏ.ஆர். ரஹ்மான் தலையிட்டார், விஜய் தலையிட்டார் என்று சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அது மட்டுமில்லாமல், இவங்க விவாகரத்து விஷயத்தில் தனுஷை இழுத்து வைத்து இணையத்தில் செய்தி பரவுவதை பார்க்க முடிகிறது. யார் குடும்பம் பிரிந்தாலும், இவர் தான் காரணம் என்று சொல்வது எல்லாம், ரொம்ப அபத்தமாக இருக்கு,

சைந்தவி - ஜி வி பிரகாஷ் விவாகரத்து முடிவில், அவர் அம்மா கூட தலையிடவில்லை என்பது தான் உண்மை. ஏனென்றால், என்ன தான் நட்பாக நெருங்கி பழகி இருந்தாலும் குடும்ப விஷயத்தில் தலையிடமாட்டார்கள், அது தான் உண்மை என்று அந்தணன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X