கவுண்டம்பாளையம் படத்தை பார்க்கவே கூடாது.. சரியான உப்புமா படம்.. விளாசிய பிரபலம்!
சென்னை: நடிகர் ரஞ்சித் இயக்கி, நடித்துள்ள கவுண்டம்பாளையம் படத்துக்கு எதிர்ப்பு எழுந்ததை அடுத்து இன்று வெளியாக இருந்த கவுண்டம்பாளையம் படம் திரைப்படம் வெளியாகவில்லை. இப்படம் பல சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து பேசி உள்ள வலைப்பேச்சு அந்தணன், இந்த படம் பட கணக்கில்கூட சேராது, சரியான உப்புமா படம் என்று பேசி உள்ளார்.
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் படங்களில் நண்பனாகவும், வில்லனாகவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் ரஞ்சித். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் நடித்து இருக்கிறார். கடைசியாக இவர், கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் ஜீவன் நடித்த 'அதிபர்' என்ற படத்தில் நடித்து இருந்தார். அதன் பின்னர் தமிழில் இவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கியலட்சுமி' தொடரில் பழனிச்சாமி என்ற ரோலில் நடித்து வருகிறார்.

தற்போது நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்திருக்கும் படம் 'குழந்தை C/O கவுண்டம் பாளையம்' இந்த படம் ஜூலை 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படம் குறித்து பேசிய ரஞ்சித் அவர்கள், மறைமுகமாக விசிக தலைவர் திருமாவளவனை தான் தாக்கி பேசியிருக்கிறார் என்றெல்லாம் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
பார்க்கக்கூடாத படம்: இந்நிலையில் இது தொடர்பாக பேட்டி அளித்துள்ள வலைபேச்சு அந்தணன், கவுண்டம்பாளையம் போஸ்டரை பார்க்கம் போதே படத்தை பார்க்க கூடாது என்று தோன்றுகிறது. ஒரு இமேஜை கூட, டைட்டில் பான்டை கூட சரியா பண்ணக்கூடாத படமாக அந்த படம் இருக்கிறது. ஆனால், ரஞ்சித் பல சேனல்களில் அதிபயங்கரமாக பேசிக்கொண்டு இருக்கிறார். இவர் பேசுவதை எல்லாம் கேட்கும் போது, பெரிய சாதி கலவரத்தை உருவாக்கி விடுவார் என நினைக்க தோன்றுகிறது. இவரே இவ்வளவு பேசும் போது, அந்த படம் எவ்வளவு பேசும் என்கிற பயம் மனதிற்குள் வருகிறது.
படத்தில் அழகியல் இல்லை: ஒரு குறிப்பிட்ட சாதியின் மீது படுபயங்கரமான வன்முயை அவர் செய்கிறார். இதில் யுகம் யுகமாக பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் வலியை படத்தில் சொல்கிறார்கள். இப்போது பா ரஞ்சித் எடுக்கும் படமாக இருக்கட்டும், வெற்றிமாறன், மாரிசெல்வராஜின் படங்கள் கருத்தை தாண்டி ஒரு அழகியல் படத்தில் இருக்கும் ஆனால், இவர்களின் படங்கள் ராவாக இப்படியே எடுத்து இருக்கிறார். அவரின் படத்தில் அழகியல் இல்லை. ஒரு போஸ்டரைக்கூட அழகாக காட்ட உங்களுக்கு துப்பு இல்லை.
உப்புமா படம்: மாரிசெல்வராஜ் பைசன் படத்தின் போஸ்டரை வெளியிட்டார். அதன் பக்கத்தில் இந்த படத்தால் நிற்க முடியுமா? உங்களுக்கு திறமை இருந்தால் அது போன்று படத்தை எடுங்கள் நாங்களும் கொண்டாடுகிறோம். நாங்கள் அனைத்து சாதியும் வேண்டும் என்று நினைக்கக்கூடிய நபர்கள். ஆனால், சாதி இல்லாமல் எதுவுமே இல்லை, படிப்பில் இருந்து அரசியல் வரை அனைத்திலும் சாதி இருக்கிறது. ஆனால், ஒரு தரமான படத்தை கொடுங்கள், அதில் உங்கள் கருத்தை சொல்லுங்கள், நாங்கள் உங்களையும் கொண்டாடுகிறோம். அதைவிட்டு விட்டு சேனல் சேனலாக உட்கார்ந்து பேசுகிறார். ஒரு நல்ல டெக்னிஷியனை வைத்து படத்தை எடுத்தால் என்ன கேடு அவருக்கு இதை பட கணக்கில் கூட சேர்க்க முடியல, கவுண்டம்பாளையம் என்கிற பெயர் கூட நினைவில் நிற்கவில்லை. அந்த அளவிற்கு ஒரு உப்புமா படத்தை எடுத்துவைத்து இருக்கிறார் என்று அந்தணன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











