ரஜினி சங்கி தான்.. லால் சலாம் படம் ஓடணும்.. அதுக்குத்தான் இந்த பேச்சு.. உண்மையை உடைத்த பிரபலம்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் லால் சலாம். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஐஸ்வர்யா என் அப்பா சங்கி இல்லை என்று பேசி இருந்தார். இது குறித்து வலைப்பேச்சு அந்தணன், ரஜினி சங்கி தான், படம் ஓடுவதற்காக இதையெல்லாம் பேசுகிறார் என்றார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மூன்றாவது திரைப்படமான லால் சலாம் படத்தின் அறிவிப்பு வெளியானது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து, எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான், மூத்த திரைப்பட இயக்குனர் ரவிக்குமார், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு மற்றும் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.

என் அப்பா சங்கி இல்லை: இந்த நிகழ்ச்சியில் இயக்குநரும், ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா பேசினார். அதில், எங்கள் படக்குழுவினர், சோசியல் மீடியாவில் வரும் பதிவுகளை அவ்வப்போது காட்டினார்கள், அதில் என் காதில், அடிக்கடி ஒரு வார்த்தை விழுகுது. எங்க அப்பாவை சங்கின்னு சொல்றாங்க. ஒரு அரசியலை சார்ந்தவங்களை சங்கின்னு சொல்லுவாங்கன்னு சொன்னாங்க. சங்கி வார்த்தை முதலில் எனக்கு தெரியாது. அதை பற்றி தெரிந்து வேதனைப்பட்டேன். ஒரு இயக்குனராக இதை சொல்ல பெருமைப்படுகிறேன். ரஜினி ஒரு சங்கியாக இருந்தால் லால் சலாம் படத்தில் நடித்திருக்க மாட்டார். ஒரு சங்கியால் இந்த படம் பண்ண முடியாது. அந்த தைரியம் ரஜினியை தவிர யாருக்கும் இல்லை என்றார்.
அந்தணன் பேட்டி: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியது குறித்து வலைப்பேச்சு அந்தணன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ஐஸ்வர்யா என் அப்பாவை சங்கினு சொல்லாதீங்க, அவர் ஒரு மனித நேயர்னு சொல்லி இருக்காங்க, அப்போ சங்கிகள் எல்லாம் மனிதநேயர் இல்லையா? என்கிற கேள்வி தான் வருகிறது. ரஜினியின் கொள்கைகள், கோட்பாடுகள் எல்லாத்தையும் பார்த்த மக்களுக்கு நன்றாக தெரியும் ரஜினி சங்கிதான் என்று. அண்மையில் யோகி ஆதித்யனாத் காலில் விழுந்தார், அதை ஏன் என்று கேட்டதற்கு, நான் சன்யாசிகளில் காலில் விழுவது என் வழக்கம் என்றார். திருவண்ணாமலையில் ஏகப்பட்ட சன்னியாசிகள் இருக்கிறார்கள் அவர்களில் காலில் விழுவாரா?
படம் ஓட வேண்டும்: ரஜினியின் கோட்பாடுகள், கொள்கைகள், சித்தாந்தம் எல்லாமே ஒரு கட்சியோடு ஒத்துப்போகிறது. அவர் சங்சிகளில் ஒருவராகத்தான் இருக்கிறார். இன்னைக்கு ஐஸ்வர்யா என் அப்பா சங்கி இல்லை என்று சொல்வதற்கு காரணம் லால் சலாம் படம் ஓடவேண்டும் என்பதுதான். தமிழ் நாட்டில் சங்கிகளுக்கு என்ன மரியாதை என்பது ஐஸ்வர்யாவிற்கு நன்றாக தெரியும் என்பதால், படம் ஓடாது என்ற பயத்தில் இப்படி பேசி இருக்கிறார்.
உலகத்திற்கே தெரியும் ரஜினி சங்கி என்று: அது மட்டுமில்லாமல், மகள் பேசியதை பார்த்து கண்கலங்கிய ரஜினி என்று செய்தி வருகிறது. நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே, அப்பா நான் இப்படி பேச போகிறேன் என்று சொல்லிவிட்டுத்தான் வந்து இருப்பார். அப்போது எதற்கு ரஜினி கண்கலங்கினார் எல்லாமே ஸ்கிரிப்ட் தான். ரஜினியின் ஸ்டைல், லுக், நடிப்பு எல்லாமே திரையில் ரசிக்கும் படி இருப்பதால், அவர் ஒரு சங்கி என்பதை மறக்க வைக்கிறதே தவிர, அவர் சங்கி என்பது உலகத்திற்கே தெரியும் என்று வலைப்பேச்சு அந்தணன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











